குவைத் நாட்டிற்கு செல்ல, 5 முஸ்லிம் நாட்டினருக்குத் தடை
வளைகுடா நாடான குவைட் ஐந்து முஸ்லிம் பெரும்பான்மை நாட்டினருக்கு விசா வழங்குவதை நிறுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏழு முஸ்லிம் நாடுகளுக்கு தடைவிதித்த நிலையிலேயே குவைட்டில் இந்த கட்டுப்பாடு வந்துள்ளது.
சிரியா, ஈராக், ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்களுக்கு குவைட்டுக்கான பயண, சுற்றுலா மற்றும் வர்த்தக விசா பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகளில் ஸ்திரமற்ற சூழல் இருப்பதால் தடை கொண்டுவரப்பட்டதாக குவைட் அரச வட்டாரம் குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பு நிலைமை சீரானவுடன் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் கடும்போக்கு குழுக்களின் வன்முறைகள் நீடிப்பதோடு சிரியா மற்றும் ஈராக்கில் உள்நாட்டு மோதல் இடம்பெற்று வருகிறது.
ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையிலான முறுகல் கடந்த ஓர் ஆண்டாக அதிகரித்துள்ளது. குவைட் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறது. 2015இல் ஷியா பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர்.
My dear Kuwait already eliminates visa those countries its not new
ReplyDeleteமுஸ்லிம் நாடுகளே முஸ்லிம்களை காட்டிக்கொடுக்கும் போது எங்கே விடிவு கிடைக்கும்.
ReplyDeleteஇந்த நாடுகளில் பிட்சினைக்கு காரணமானவர்கள் யாரென தெரியாதா...
Nalla mudivu vilangeedum
ReplyDelete