களவு எடுத்த பேஸ்புக், 500 மில்லியன் டொலர் அபராதம்
வேறொரு நிறுவனம் ஒன்றின் தொழில்நுட்பத்தை சட்டவிரோதமாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பிரபல பேஸ்புக் சமூகதளம் மற்றும் ஏனைய பிரதிவாதிகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் 500 மில்லியன் டொலர் அபராதம் விதித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு பேஸ்புக் வாங்கிய கணனி குறியீடு, வீடியொ கேம் தயாரிக்கும் நிறுவனமான செனிமெக்ஸ் சொந்தமாக உருவாக்கிய தொழில்நுட்பம் என்பதை நடுவர் குழு (ஜூரி) கண்டறிந்துள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை திருட்டுத்தனமாக பயன்படுத்தியதாக குற்றம் காணப்பட்டிருக்கும் பேஸ்புக்கின் ஓர் அங்கமான ஆக்குலஸ், நீதிமன்ற முடிவுக்கு ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கானது பேஸ்புக் நிறுவனத்தின் சமீபத்திய வரவு செலவு முடிவுகளின் முக்கியத்துவத்தை குறைத்தது. அதில், அந்நிறுவனத்தின் சமூக வலைத்தள நிறுவனம் ஈட்டிய லாபம் சுமார் 177 சதவிதமாக காணப்பட்டது.
Post a Comment