ஹக்கீமை வெளியேற்ற சதி, 5 நட்சத்திர ஹோட்டலில் சந்திப்பு, தலைமையை கைப்பற்றவும் முயற்சி
-Siddeque Kariyapper-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் “வசந்தம்” தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துகள் மற்றும் அவரது முகநூலில் வெளியிட்ட பதிவுகளையடுத்து எழுந்துள்ள நிலைமைகளைப் பயன்படுத்தி கட்சியின் செயற்பாடுகளை ஸ்தம்பிதமடையச் செய்து அதிகாரத்தைக் கைப்பற்றும் சதி முயற்சிகள் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் தற்போது தகவல்கள் கசிந்துள்ளன.
நேற்றிரவு (31) கொழும்பு கோட்டை பிரதேசத்திலுள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் வரவேற்பாளர் பிரிவில் கூடிய கட்சியின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் மூவர் உட்பட ஒன்பது பேர் (அனைவரும் உயர்பீட உறுப்பினர்களே) இது தொடர்பில் கலந்தாலோசனையில் ஈடுபட்டிருந்தனர்.
தவிசாளர் பஷீர் சேகு தாவூத் தெரிவித்துள்ள கருத்துகளால் தற்போது எழுந்துள்ள நிலைமைகளை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும் இதற்காக பஷீர் சேகு தாவூதுடன் இணைந்து செயற்படுவது குறித்தும் இவர்கள் ஆலோசித்துள்ளனர்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் ஆகியோரைக் கட்சிக்குள் உள்வாங்கிக் கொள்வது தொடர்பிலும் இங்கு கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது
மேலும் இம்மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள பேராளர் மகாநாட்டை நடத்த விடாமல் தடுப்பது குறித்தும் சபாஷிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் உயர்பீடத்தைச் சேர்ந்த ஏனைய முக்கியமானவர்களையும் ரவூப் ஹக்கீமுக்கு எதிரான போக்கைக் கொண்டவர்களையும் தங்களுடன் இணைத்து பெரும்பான்மை பலத்துடன் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி தலைமைத்துவத்திலிருந்து ஹக்கீமை நீக்குவது தொடர்பிலும் இங்கு கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தக் கலந்தாலோசனையில் ஈடுபட்டவர்களில் ஒருவர் (அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவரல்லர்) இன்று (01) தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக தன்னால் செயற்பட முடியாதென ஏனைய எண்மருக்கும் தொலைபேசியில் தெரிவித்துள்ள நிலையிலேயே இந்த விவகாரம் இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்தச் செய்தியை மிகுந்த பொறுப்புடன் இங்கு நான் பதிவிடுகிறேன்.
கிழக்கு மாகாணத்திற்குள்ளேயே ஒரு
ReplyDeleteகுழப்பமாகாணம் அல்லது (மயானம் )
அமைத்து கட்டி ஆலச்சொல்லுங்கள் .
சும்மா போன பாம்பை புடிச்சி வேஷ்டி
க்குள்ளே விட்டு இன்னும் பிரச்சினை
உண்டாக்கவா போகிறீர்கள் ?
நீங்கள் தட்டில் உண்ணுவது சோரா?...?
மனம் கெட்டவங்களே இன்னும் ஒரு
சுனாமி வந்து நீங்கள் எல்லாம் அள்ளுப்ப
ட்டு போகணும் . நீங்கள் பிரதச வாத
அரசியல் செய்து கிழித்தது போதும்
புதியவர்களுக்கு வழி விட்டு கொடுங்கள்
உங்கள் மீது மக்கள் சாபமிடும் காலம்
தான் இது
What is wrong in that move if it's a genuine one.
ReplyDeleteIf a problem arise and want a solution anyone from that side should be prepared.
It's to avoid last minute chaos in decision making.
If Hakeem or whoever it is wrong and need to be expelled a democratic way can be implemented.
We are not bothered who those people gathered but we can't see it's a conspiracy if their move is genuine.
so what Mr.kariyapper? we all need a change in a leadership. we do not need this joker Hakeem anymore as our leader.
ReplyDelete@Muja Muja
ReplyDeleteநீங்கள் ரவுப் ஹக்கீம் விசிறியாக இருக்கலாம், உங்களுக்கு இந்தக் கூட்டத்தில் கடுப்பும் கூட இருக்கலாம்; அதற்காக பொத்தாம் பொதுவா "கிழக்கு முஸ்லிம்களை" பிரதேசவாதிகளாகச் சித்தரிப்பதும், சுனாமிக் கதைகள் அளப்பதும் நீங்கள் ஒரு மார்க்க அறிவு இல்லாத அறிவிலி என்பதையும் முதலத் தர "பிரதேச வாதி" நீங்கள்தான் என்பதையும் பறை சாற்றி சொல்கிறது.
பொதுபல சேனா பிரச்சினையால் "கிழக்கு முஸ்லிம்கள்" பாதிக்கப்படவில்லை. ஆனால் அவர்களின் "முஸ்லிம்" என்ற ஒரே உணர்வுதான் மஹிந்தவுக்கு எதிராக 90 %, 80 %, 70 % என வாக்குகளால் ஆப்பு அடிப்பதற்குக் காரணமாக இருந்தது. வார்த்தைகளை அளந்து பேசுங்கள். ஒரு சோதனையால் பாதிக்கப்பட்டவன் மட்டுமல்ல மீதமானவனுக்கும் தான் சோதனை. நல்ல ஆலிம்சாப்பைப் பார்த்து இஸ்லாம் படியுங்கள். இன்றுவரை மார்க்க அறிவு மற்றும் சமூகப் பற்று கொஞ்சமும் இல்லாத கூழ்முட்டைத் தலைவர் ரவுப் ஹக்கீமின் இருப்பு கிழக்கு மக்களால்தான் பாதுகாப்பில் உள்ளது. நீங்களும் பஷீர் சேகுதாவூத் போன்ற "மேலே பார்த்து உமிழும் அறிவிலித்தான்"
குறிப்பு:
@ jaffna muslim இதுபோன்ற அறிவிலிகள் இடுகைகளை அனுமதிப்பதானால் எதற்க்காக "will be published after approval" எனச் சொல்ல வேண்டும்?
SLMC eppa wandazo appa aarambiccha thuwesam .eastern always does the same..like MUBARAK
ReplyDeleteThen who do you want Me.Sano? Is Broker Basheer your next selection?
ReplyDeleteWho gonna support for eastern stupid bashir seru dawid..??
ReplyDeleteதோழர் இடி அவர்களே !
ReplyDeleteஉங்கள் உபதேசத்திற்கு நன்றி,
ஒரு தலைமைத்துவம் கவிழ்க்கப்படும்
அதன் பின் விளைவுகள் எப்படி அமையும்
என்பதை வரலாறுகளில் படித்தவன்
என்ற வகையில் தான் எழுதினேன்.
(கொஞ்சம் உங்களுக்கு உரைப்பாக)
ஆனால் பொதுபலசேனா வினால்
நீங்கள் பாதிக்கப்படாமல் இருந்தும் ,
உங்கள் வாக்குகளினால் தான் முழு
இலங்கை முஸ்லீம்களும் பாதுகாக்க
பட்டார்கள் என்று சொன்னீர்கள் .நன்றி
நீலப்படையணி , அதாவுல்லா , பஷீர்
சேகு தாவூத் ,இன்னும் மரத்திற்குள்
இருந்து எத்தனை வற்புறுத்தல் .....?
இவை அனைத்துக்கும் அப்பால் நமக்கு
வேறு தெரிவு எதுவாக இருக்க முடியும் ?
கிழக்கு மாகாண மக்களுக்காக சூறாவளி , சுனாமியின் பொது உடன்
செயற்பட்ட உங்கள் உடன்பிறப்பாக
இருந்தவர்களையும் மதிக்காத ஒரு
தலைமைத்துவம் மர்ஹூம் அஷ்ரப்
இற்கு பின் யாராக இருக்க முடியும்?
புதிய புரட்ச்சியாளர்களைத்தான் வசை
பாடினேன் தவிர ஒட்டு மொத்த உடன்
பிறப்புகளை அல்ல என்பதை அறிவீர்கள்
வந்தாரையும் வரவேற்ற யாழ்ப்பாண முஸ்லீம்கள் இது வரைக்கும் எந்தவொரு
அரசியல் கடசியாலும் எந்த புண்ணியமும் அடைய வில்லையே இடி?
"முஸ்லீம் உம்மத் ஓருடம்பை ஒத்ததாகும்
அதில் ஓரிடத்தில் வலி கண்டால் அதை
முழு உடம்பும் உணரும் " இப்போது
நாம் சிந்திப்போம் நம் எங்கு இருக்கிறோம் என்று?
தோழர் இடி அவர்களே !
ReplyDeleteஉங்கள் உபதேசத்திற்கு நன்றி,
ஒரு தலைமைத்துவம் கவிழ்க்கப்படும்
அதன் பின் விளைவுகள் எப்படி அமையும்
என்பதை வரலாறுகளில் படித்தவன்
என்ற வகையில் தான் எழுதினேன்.
(கொஞ்சம் உங்களுக்கு உரைப்பாக)
ஆனால் பொதுபலசேனா வினால்
நீங்கள் பாதிக்கப்படாமல் இருந்தும் ,
உங்கள் வாக்குகளினால் தான் முழு
இலங்கை முஸ்லீம்களும் பாதுகாக்க
பட்டார்கள் என்று சொன்னீர்கள் .நன்றி
நீலப்படையணி , அதாவுல்லா , பஷீர்
சேகு தாவூத் ,இன்னும் மரத்திற்குள்
இருந்து எத்தனை வற்புறுத்தல் .....?
இவை அனைத்துக்கும் அப்பால் நமக்கு
வேறு தெரிவு எதுவாக இருக்க முடியும் ?
கிழக்கு மாகாண மக்களுக்காக சூறாவளி , சுனாமியின் பொது உடன்
செயற்பட்ட உங்கள் உடன்பிறப்பாக
இருந்தவர்களையும் மதிக்காத ஒரு
தலைமைத்துவம் மர்ஹூம் அஷ்ரப்
இற்கு பின் யாராக இருக்க முடியும்?
புதிய புரட்ச்சியாளர்களைத்தான் வசை
பாடினேன் தவிர ஒட்டு மொத்த உடன்
பிறப்புகளை அல்ல என்பதை அறிவீர்கள்
வந்தாரையும் வரவேற்ற யாழ்ப்பாண முஸ்லீம்கள் இது வரைக்கும் எந்தவொரு
அரசியல் கடசியாலும் எந்த புண்ணியமும் அடைய வில்லையே இடி?
"முஸ்லீம் உம்மத் ஓருடம்பை ஒத்ததாகும்
அதில் ஓரிடத்தில் வலி கண்டால் அதை
முழு உடம்பும் உணரும் " இப்போது
நாம் சிந்திப்போம் நம் எங்கு இருக்கிறோம் என்று?
பொதுவான கருத்து குறித்தவர்களை மாத்திரம் நடக்காது. நான் எப்பொழுதும் பிரதேசவாதத்தை ஆதரித்தவனல்ல. ஆதலால் உங்கள் கருத்துக்கள் என்னைச் சேராது. தலைமையை விமர்சிப்பது வேறு அதற்க்கு எதிராக சூழ்ச்சி செய்வது வேறு. எனது தெரிவு முதலாவது. அவர் தகுதி இல்லாதவர் என்பதிலும் மார்க்க அறிவு பூச்சியமானவர் என்பதிலும் எள்ளின் முனை அளவும் சந்தேகம் இல்லை.
ReplyDelete