3 அமைச்சர்களை நீக்குவதை, நிராகரித்தார் ரணில்
ஐக்கிய தேசியக் கட்சியின் சில அமைச்சர்களை அவர்கள் வகிக்கும் பதவிகளில் இருந்து நீக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இடையிலான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
ரவி கருணாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோரை நீக்குமாறே யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் கூறியுள்ளார்.
எனினும் இந்த அமைச்சர்களை நீக்குவது தொடர்பில் தனக்கு இணங்க முடியாது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் கட்சியின் தலைமைத்துவத்திற்கு பிரச்சினை ஏற்பட்ட போது இவர்களே தனக்கு பக்கபலமாக இருந்தனர் எனவும் இதனால் அவர்களை நீக்க தன்னால் இணங்க முடியாது என்றும் பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டு அமைய நிதி, சட்டம், ஒழுங்கு, பெருந்தெருக்கள், உயர்கல்வி ஆகிய அமைச்சுக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களுக்கே கிடைக்க வேண்டும்.
இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களது யோசனைக்கு இணங்க முடியாது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
Post a Comment