முஸ்லிம் கடைகளை பலவந்தமாக, 3 நாட்கள் மூடவைத்த இனவாதக் குழு - பொலிஸார் வேடிக்கை பார்ப்பு
தம்புள்ளை நகரில் கடந்த வாரம் தனியார் வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைக் கட்டுப்படுத்துவதில் அப் பிரதேச பொலிசார் அசிரத்தையாக செயற்பட்டதுடன் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக மூடச் செய்வதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குறிப்பிட்டு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள இம் முறைப்பாட்டுக் கடிதத்தின் பிரதிகள் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களுக்கும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 8 ஆம் திகதி முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான உணவகத்தில் வாடிக்கையாளருக்கும் அந்த உணவகத்தின் முகாமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது. இதன்போது குறித்த வாடிக்கையாளர் தரப்பில் வந்த சுமார் 25 பேர் கொண்ட கும்பல் உணவகத்தின் முகாமையாளரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இருந்தபோதிலும் இந்த சம்பவத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அப் பகுதியைச் சேர்ந்த ஒரு இனவாதக் குழுவினர் தம்புள்ளை நகரிலுள்ள சகல முஸ்லிம் வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதற்கமைய முஸ்லிம் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மிகவும் பலவந்தமான முறையில் மூன்று நாட்கள் தொடராக மூடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் பொலிசார் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
தம்புள்ளையில் அண்மைக்காலமாக இனவாத சக்திகள் பிரச்சினைகளை உருவாக்கி வருவதை தாங்கள் அறிவீர்கள். அந்த வகையில் மேற்படி சம்பவம் தொடர்பிலும் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பிலும் உரிய விசாரணைகளை நடாத்துமாறும் எதிர்காலத்தில் இவ்வாறான இனவாத சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துமாறும் வேண்டிக் கொள்கிறோம் என அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடிவெள்ளி
எங்கே அப்பா அரசியல் தலைவர்கள் என்று கூறிக் கொள்ளும் இந்த பொம்மனாட்டி அரசியல் வாதிகள்....!! முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும். அடியைப் போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள். இந்த சம்பவத்துக்கு எதிராக மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதோடு நாடு பூராகவும் ஆர்ப்பாட்டம் செய்யப்பட வேண்டும். முக்கியமாக கிழக்கில் முன்னெடுக்கப்பட வேண்டும். சிந்திப்பார்களா...? துடிப்புள்ள முஸ்லீம் இளைஞர்கள். மதிப்புக்குரிய சகோதரர் ஆமீனுக்கு எமது உணர்வு பூர்வமான நன்றிகள்.
ReplyDeleteஎங்கே அப்பா அரசியல் தலைவர்கள் என்று கூறிக் கொள்ளும் இந்த பொம்மனாட்டி அரசியல் வாதிகள்....!! முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும். அடியைப் போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள். இந்த சம்பவத்துக்கு எதிராக மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதோடு நாடு பூராகவும் ஆர்ப்பாட்டம் செய்யப்பட வேண்டும். முக்கியமாக கிழக்கில் முன்னெடுக்கப்பட வேண்டும். சிந்திப்பார்களா...? துடிப்புள்ள முஸ்லீம் இளைஞர்கள். மதிப்புக்குரிய சகோதரர் ஆமீனுக்கு எமது உணர்வு பூர்வமான நன்றிகள்.
ReplyDeletePaper waste
ReplyDelete