உலகின் 3 ஆவது, இடத்தில் இலங்கை
தகவல் அறியும் சட்ட வரைவை வலுப்படுத்திய நாடுகள் இடையில் உலகில் இலங்கை மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளதாக கனேடிய அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கைக்குள் தகவல்களை அறிந்து கொள்ள மக்களுக்கு இருக்கும் உரிமையானது உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை உயர்மட்டத்தில் இருப்பதாக கனேடிய சட்டம் மற்றும் ஜனநாயகத்திற்காக நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த தரப்படுத்தலில் தெற்காசிய நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தரப்படுத்தலுக்கு அமைய மெக்சிகோ 136 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் சேர்பியா 135 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இலங்கை 131 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது. இந்தியா 128 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.
Post a Comment