Header Ads



3 பேர் பற்றி, ஜனாதிபதியிடம் முறையிட UNP தீர்மானம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இருவர் மற்றும் மாகாண முதலமைச்சர் ஆகியோருக்கு எதிராக, ஜனாதிபதியிடம் அறிக்கையொன்றைக் கையளிக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் டிலான் பெரேரா, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய ஆகியோருக்கு எதிராகவே, அறிக்கை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக, ​அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளியிடும் கருத்து தொடர்பிலும் ஐக்கிய தேசியக் கட்சி சம்பந்தமாக அமைச்சர் டிலான் பெரேரா வௌியிடும் கருத்து தொடர்பிலும் அதிருப்தி தெரிவித்தே, ஜனாதிபதிக்கு முறைப்பாட்டு அறிக்கை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய அவதானம், மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய மீது செலுத்தப்பட்டுள்ளது.   அதாவது, மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியை தூற்றிவருவது தொடர்பில், விசேடமாக கவனம் செலுத்தியுள்ள ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள், இது தொடர்பில், தமது அதிருப்தியைத் தெரிவித்து, ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றைச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடுத்த கூட்டத்தில், ஜனாதிபதி கலந்துகொள்வார் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள உறுப்பினர்கள், இதன்போது, இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.