2 கொலைக் குற்றச்சாட்டிலிருந்து, காப்பாற்றப்பட்ட மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை குற்றச்சாட்டில் இருந்து தான் காப்பாற்றியதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட எழுதிய “எனது வாக்குமூலம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் நீதியரசர் இதனை கூறியுள்ளார்.
அன்றைய காலத்தில் நீதவான்கள் நீதிமன்ற மனநிலையில் இருந்து செயற்பட்டனர். தற்போது அவர்கள் நீதிமன்ற மனநிலையில் இருந்து செயற்படுவதில்லை.
மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக இரண்டு கொலை குற்றச்சாட்டுக்களும், ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறி கைது செய்திருந்தனர்.
இது குறித்து கேள்விப்பட்டதும் எனது நண்பரான அவரை தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பில் விசாரித்தேன்.
தனக்கு இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்புமில்லை எனவும், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் தான் அந்த இடத்தில் இருந்து சென்றதாகவும் மகிந்த கூறினார்.
இதனால் அவரை குற்றச்சாட்டில் இருந்து காப்பற்ற நான் பலவற்றை செய்தேன்.
சம்பவத்தை நேரில் பார்த்த இரண்டு முக்கிய சாட்சியாளர்கள் இருந்ததனர். அது பின்னப்பட்ட சாட்சிகள்.
கொழும்பிற்கு சென்ற சீ.ஐ.டியினர் சம்பவத்தை நேரில் பார்த்த பிள்ளைகளின் சாட்சியத்தை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை நடத்தி உண்மையை கண்டறிந்தனர்.
"டபள் கெப் வாகனத்தில்" சென்றது மகிந்த ராஜபக்ச அல்ல, அருகில் மரம் ஒன்றில் மறைந்திருந்த நபர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக உறுதியாகியது.
இதனையடுத்து பொய் சாட்சி கூறியவர்களை சிறையில் அடைத்து மகிந்த ராஜபக்சவை விடுதலை செய்ய முடிந்தது.
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு என்பது மூடப்பட வேண்டிய நிறுவனம். இதற்காக தொடர்ந்தும் போராட்டம் நடத்தப்படும்.
ரொஹான் வெலிவிட்ட கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது நீதிமன்ற மனநிலையில் நீதவான் செயற்படவில்லை.
ரொஹானின் வாக்குமூலத்தில் மாத்திரம் அல்ல மேல் நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பிலும் பொலிஸாரின் தேவையற்ற செயற்பாடுகள் தெளிவாகியுள்ளது எனவும் சரத் என் சில்வா கூறியுள்ளார்.
Post a Comment