Header Ads



போராடிய முஸ்லிம்கள் மீது, ஆட்டோவில் வந்த சிங்கள அதிகாரி தாக்குதல் - 2 பேர் காயம்

வீச்சுவலைகள் பாவ­னைக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­மைக்கு எதி­ராக கந்­த­ளாயில் இடம்­பெற்ற கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தின் மீது இனந்­தெ­ரி­யா­த­வர்­களால் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் இரு முஸ்லிம் மீன­வர்கள் காய­ம­டைந்­துள்­ளனர். காய­ம­டைந்த இரு­வரும் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். சம்­ப­வத்­தை­ய­டுத்து கந்­த­ளா­யி­லி­ருக்கும் முஸ்­லிம்கள் மத்­தியில் பதற்றநிலை உரு­வா­கி­யுள்­ளது.

வீச்சுவலை­களைப் பாவிப்­பதை தடை செய்­தி­ருப்­ப­தனால் 100க்கு மேற்­பட்ட முஸ்லிம் குடும்­பங்கள் பாதிப்­ப­டைந்­துள்­ளன. மேற்­படி தடையை இரத்துச்செய்­யக்­கோரி முஸ்லிம் மீன­வர்­களால் நடத்­தப்­பட்ட கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தை  குழப்பும் வகையில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது  ஆட்­டோவில் வந்­த­வர்­களால் நடத்­தப்­பட்ட தாக்­குதல் கார­ண­மாக பல மீன­வர்கள் காய­ம­டைந்­த­னர்.

நிஷார் மற்றும் பாகீர் என்ற மீன­வர்­களே வைத்தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

இச்­சம்­பவம் பற்றி தெரியவருவதாவது, 

கந்­த­ளாய்க்­ கி­ரா­மத்தில் வாழும் முஸ்லிம் மீன­வர்கள் கந்­தளாய் குளத்தில் 100 வரு­டங்­க­ளுக்கு மேலாக  வீச்சு வலை­யையும் தூண்­டி­லையும் பாவித்து மீன்­பி­டித்து வரு­வ­தாகவும் அண்­மையில் மீன்­பிடி அதி­கா­ரி­யொ­ரு­வ­ரினால் மேற்படி இருவகை முறைகளும் தடை செய்யப்­பட்­டன. 

இந்நிலையில் மேற்­படி தடை­­யினால் கந்­த­ளாயில் வாழும் நூற்­றுக்­க­ணக்­கான முஸ்லிம் மீன­வர்­களின் வாழ்­வா­தாரம் பாதிக்­கப்­ப­டு­ம் நிலையில் தடையை நீக்­கக்­கோரி கவனயீர்ப்பு போராட்­ட­மொன்றை நடத்தும் நோக்கில் போட்­டங்­காடு எனும் இடத்­தி­லி­ருந்து மீன­வர்கள் ஊர்­வ­ல­மாக வந்­தனர்.

இவ்வேளை­யில்தான் இரு ஆட்­டோக்­களில் வந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின் சூத்திரதாரி  பெரும் பான்மையினத்தைச் சேர்ந்த மீன்பிடித்திணைக்கள அதிகாரியென தாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

(வீரகேசரி)

No comments

Powered by Blogger.