Header Ads



தம்­புள்ளை பள்­ளி­வா­சலை இடம்­மாற்றிக்கொள்­ள, 20 பேர்ச் காணியே வழங்கமுடியும் - சம்­பிக்க

பாரிய நகரம் மற்றும் மேற்குப் பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வா­சலை இடம்­மாற்றிக் கொள்­வ­தற்கு 20 பேர்ச் காணியே வழங்க முடியும் என பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் பிர­தி­நி­தி­க­ளிடம் தெரி­வித்­துள்ளார்.

பள்­ளி­வாசல் நிர்­வாகம் புதிய இடத்தில் பள்­ளி­வா­சலை நிர்­ம­ணித்துக் கொள்­வ­தற்கு 80 பேர்ச் காணியை ஒதுக்­கு­மாறு அமைச்­ச­ரிடம் வேண்­டுகோள் விடுத்­தது.

எனினும் பள்­ளி­வாசல் 20 பேர்ச் காணி­யி­லேயே அமைந்­துள்­ள­தாகக் கூறி அந்­த­ளவு காணி­யையே ஒதுக்­கு­வ­தாகக் கூறினார்.

நேற்று முன்­தினம் மதியம் பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள பாரிய நகரம் மற்றும் மேற்குப் பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சில் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­கவின் தலை­மையில் தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்கு காணி ஒதுக்­கு­வது தொடர்­பா­கவும் தம்­புள்ளை நகர அபி­வி­ருத்தித் திட்­டங்கள் தொடர்­பா­கவும் கலந்­து­ரை­யா­ட­லொன்று இடம்­பெற்­றது.

இக்­க­லந்­து­ரை­யா­டலில் தம்­புள்ளை பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் சார்பில் அதன் தலைவர் எம்.ஐ.எம். கியாஸ், நிர்­வாக சபை உறுப்­பினர் ரஹ்­மத்­துல்லா மற்றும் தம்­புள்ளை பிரி­வெ­னாவைச் சேர்ந்த ராஹுல தேரர், நகர அபி­வி­ருத்தி சபை அதி­கா­ரிகள் உட்­பட பலர் கலந்து கொண்­டனர்.

தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்கு காணி ஒதுக்­கு­வது தொடர்பில் பௌத்த தேரர் எதிர்ப்பு வெளி­யிட்­ட­போதும் பள்­ளி­வாசல் வேறு இடத்­துக்கு மாற்­றப்­ப­ட­வுள்­ளதால் அவ­சியம் காணி வழங்­கப்­பட வேண்­டு­மென அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பி­னர்கள் 17 பேரும் கையொப்­ப­மிட்டு நகர அபிவி­ருத்தி அதி­கார சபைக்கு மகஜர் ஒன்­றி­னையும் கைய­ளித்­துள்­ளனர்.

தற்­போது தம்­புள்ளை பள்­ளி­வாசல் கழி­வ­றைகள் மற்றும் கட்­டி­டங்கள் உட்­பட 41.49 பேர்ச் காணியில் அமைந்­துள்­ள­தா­கவும் வாகனத் தரிப்­பிட வச­தி­யையும் கருத்­திற்­கொண்டு பள்­ளி­வா­ச­லுக்கு 80 பேர்ச் காணி வழங்­கப்­பட வேண்­டு­மெ­னவும்  தம்­புள்ளை பள்­ளி­வா­சலை சூழ குடி­யே­றி­யுள்ள சிங்­கள, தமிழ், முஸ்லிம் குடும்­பங்­க­ளுக்கும் பள்­ளி­வா­ச­லுக்கும் காணி ஒதுக்­கப்­பட்­டுள்ள பகு­தி­யி­லேயே குடி­யே­று­வ­தற்கு நிலம் வழங்­கப்­பட வேண்­டு­மெ­னவும் மக­ஜரில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கலந்­து­ரை­யா­ட­லின்­போது அமைச்சர் சம்­பிக்க பள்­ளி­வா­சலை சூழ வசிப்­ப­வர்­க­ளுக்கு மாற்­றிடம் வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­வ­தாக உறு­தி­ய­ளித்தார். தம்­புள்ளை பள்­ளி­வாசல் சார்பில் கலந்து கொண்ட பிர­தி­நி­திகள் பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் ஏனைய உறுப்­பி­னர்­க­ளிடம் கலந்­து­ரை­யாடி இறுதி முடி­வினைத் தெரி­விப்­ப­தாக அமைச்­ச­ரிடம் கூறி­னார்கள். 

மாத்­த­ளையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மாகாண சபை உறுப்­பினர் ஏ.எச்.எம். இப்­றாஹீம் தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்குப் புதிய காணி ஒதுக்­கீடு தொடர்­பாக கருத்து தெரி­விக்­கையில்;

‘பள்­ளி­வாசல் நிர்­வாக சபை­யினர் பள்­ளி­வா­ச­லுக்கு 80 பேர்ச் காணியே வழங்கப்பட வேண்டுமென உறுதியாக இருக்கிறார்கள். இது தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாக சபையுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்தை எட்டவுள்ளோம். 2012 ஆம் ஆண்டு முதல் தீர்க்கப்படாதுள்ள தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினைக்கு இறுதித் தீர்வைப் பெற வேண்டியது அவசியமாகும் என்றார்.

-ARA.Fareel-

1 comment:

Powered by Blogger.