Header Ads



சுவிட்சர்லாந்தில் 2016 இல், 880 நிலநடுக்கங்கள்

சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2016-ம் ஆண்டில் மட்டும் 880 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸ் நில அதிர்வுகளை பதிவு செய்யும் அலுவலகம் கடந்தாண்டில் நாடு முழுவதும் நிகழ்ந்த நிலநடுக்கங்களை பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில், நாடு முழுவதும் 880 நிலநடுக்கங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இவற்றில் 31 நிலநடுக்கங்கள் ரிக்டாரில் 2.5 அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் 24-ம் திகதி வாலைஸ் மாகாணத்தில் உள்ள Leukerbad பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டாரில் 4.1 என்ற அளவில் பதிவானது தான் நாட்டிலேயே மிக மோசமான நிலநடுக்கமாகும்.

எப்போதும் போல Valais மற்றும் Graubunden ஆகிய இரண்டு மாகாணங்கள் இந்த நிலநடுக்கங்களுக்காக அதிகம் பாதிப்பை சந்தித்துள்ளன.

சுவிட்சர்லாந்து நாட்டில் ரிக்டாரில் 6 மற்றும் அதற்கு மேலான அளவில் நிலநடுக்கங்கள் 50 முதல் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும்.

கடந்த 1946-ம் ஆண்டு வாலைஸ் மாகாணத்தில் உள்ள Sierre என்ற பகுதியில் 6.2 என்ற ரிக்டார் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேலும், சுவிஸ் வரலாற்றில் கடந்த 1356-ம் ஆண்டு பேசல் நகரில் 6.6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது தான் மிக மோசமானது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.