Header Ads



20 இலட்சத்திற்கு கோட் வாங்கிய அர்ஜுன மகேந்திரனின், அதிரவைக்கும் செலவுகள்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநராக அர்ஜுன மகேந்திரன் பதவி வகித்த 21 மாத காலப்பகுதியில், 2 மில்லியன் செலவில் உடை (கோட்) ஒன்றை வாங்கியது, உட்பட சுமார்  66 மில்லியன் ரூபாவை அவரது தனிப்பட்ட செலவிற்கு பயன்படுத்தியுள்ளதாக, ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் ஏற்பாட்டாளரும், வடமத்திய மாகாணசபை உறுப்பினருமான வசந்த சமரசிங்க குறித்த விடயம் தொடர்பாக, மத்திய வங்கி வெளியிட்டுள்ள உள்ளக கணக்கறிக்கையில் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக,  ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து  வசந்த சமரசிங்க தெளிவுபடுத்தியுள்ளதாவது, நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில், பிரதமருக்கு நெருக்கமானவரான  அர்ஜுன மகேந்திரன், 21 மாதங்கள் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்தப்போது,  163 தடவைகள் இடம்பெற்ற கொடுப்பனவுகள் மூலம் சுமார் 66 மில்லியன் ரூபாவை தனது தனிப்பட்ட விடயங்களுக்காக பயன் படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த 66 மில்லியன் ரூபா நிதியை, வெளிநாட்டு பயணங்கள், பயணசீட்டு கொள்வனவு, கடனட்டை கொடுப்பனவு, விருந்துபசாரம் மற்றும் சொந்த பாவனை பொருட்கள் கொள்வனவு என செலவளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் பொலிஸ் விசேட பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி,140,000 ருபாவை முறைக்கேடாக பயன்படுத்தினார். என்ற குற்றச்சாட்டு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

எனவே, முன்னாள் மத்திய வங்கி ஆளுனரையும்,  நீண்ட காலம் சிறையில் அடைக்க வேண்டும்  எனவும், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் அர்ஜுன மஹேந்திரனுக்கு எதிராக நிதி மோசடி விசாரணை பிரிவில்,முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்

அத்தோடு சுமார் 2 மில்லியன் செலவில் உடை ஒன்றை (கோட்) வங்கியுள்ளமை மற்றும் அவரது தனிப்பட்ட செலவுகள் உள்ளிட்ட தகவல்களை, வசந்த சமரசிங்க தெரிவித்து, நிதி மோசடி விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.