லண்டனில் நாளை, இலங்கை முஸ்லிம்களின் 2 முக்கிய நிகழ்வுகள்..!
லண்டன் ஹரோ ஶ்ரீ லங்கா முஸ்லிம் கலாச்சார நிலையத்தில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கான திறந்த கண்காட்சியும் இலங்கையின் 69 ஆம் சுதந்திர தின பிரார்த்தனை கூட்டமும்.
லண்டன் ஹரோவில் அமைந்துள்ள ஶ்ரீ லங்கா முஸ்லிம் கலாச்சார நிலையத்தில் ( SLMCC - Harrow ) முஸ்லிம் அல்லாத அயலவர்களுக்கும், ஹரோ நகரை சூழ உள்ளவர்களுக்குமான திறந்த இஸ்லாமிய கண்காட்சியொன்று நாளை ஞாயிறு ( 05/02/2017 ) மாலை 02 மணி முதல் 05 மணி வரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. Muslim Council of Britain என்ற அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க நாடளாவிய ரீதியில் 150 பள்ளிவாசல்களில் குறித்த கண்காட்சி நிகழ்ச்சிகள் நடாத்தப் படவுள்ளன. குறித்த கண்காட்சி நிகழ்ச்சிகளில் ஐக்கிய இராஜ்ஜியத்தில் ( UK ) வாழ்ந்து வரும் முஸ்லிங்கள் பற்றியும் பள்ளிவாசல்களுக்குள்ளே அன்றாடம் நடைபெறுபவை பற்றியும் சிறந்த தெளிவை பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டல்களும் வழங்கப் படவுள்ளன.
அறிமுகமான முஸ்லிமல்லாத அயலவர்கள், நன்பர்கள், இஸ்லாம் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் அனைவரையும் குறித்த நிகழ்ச்சிக்கு அழைத்து வருமாறு SLMCC - Harrow நிருவாகம் எமது சகோதர, சகோதரிகளை அன்பாய் வேண்டிக் கொள்கின்றது.
அத்துடன் இலங்கையின் 69 ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை ஞாயிறு 05/02/2017 மாலை 05 மணி முதல் 08 மணி வரை விசேட ஞாபகார்த்த, பிராத்தனை கூட்டமொன்றை ஶ்ரீ லங்கா முஸ்லிம் கலாச்சார நிலையமும் ( SLMCC - Harrow ) ஐக்கிய இராஜ்ஜியத்தில் வசிக்கும் இலங்கை முஸ்லிம் அமைப்புக்களின் சபையாகிய COSMOS - UK யும் இணைந்து நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்ய பட்டுள்ளன.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இலங்கைக்கான ஐக்கிய இராஜ்ஜிய உயர் ஸ்தானிகர் திருமதி அமரி விஜயவர்தன அவர்களும் கெளரவ விருந்தினர்களாக கிழக்கு ஹரோ பாராளுமன்ற உருப்பினர் திரு bபொப் ப்லக்மன், மேற்கு ஹரோ பாராளுமன்ற உருப்பினர் திரு gகரெத் தோமஸ் மற்றும் ஹரோ நகராட்சி தலைவர் திருமதி ரேகா ஷா அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
தகவல் ஆங்கிலத்தில் : சகோதரர் இர்ஷாத் வஹாப்.
தமிழில் : அஷ் ஷெய்க் ஷfபீக் zஸுபைர்.
(பிரதம இமாமும் தஃவா அழைப்பாளரும் - அல் ஹிதாயா மஸ்ஜித், க்ரொய்டன். தெற்கு லண்டன் )
Post a Comment