தஃவா பணிகளில், வாய் பேசமுடியாத 16 ஊமைகள் (படங்கள்)
-மூத்த ஊடகவியலாளர் எம்.ஜே.எம்.தாஜுதீன்-
வாய் பேசமுடியாத ஊமைகள் - அதாவது விசேட தேவையுடையவர்களின் குழுவொன்று தஃவா பணிகளுக்காக முதன்முறையாக நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு வருகை தந்துள்ளது.
22 பேர் அடங்கிய இந்த ஜமாஅத்தில் 16 பேர் வாய்பேசமுடியா ஊமைகள்.
இவர்கள் கடந்த 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாள் ஜமாஅத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊமைகளுக்குரிய சைகை மொழியில் இவர்கள் உரையாற்றும்போது அவர்களுடன் வந்தவர்கள் அதற்கு தமிழ் மொழியில் விளக்கம் தருகின்றனர்.
ஊமைகள் என்று சமுதாயத்தால் ஒதுக்கப்படுபவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டி அவர்களையும் சமுகம் மதிக்கும் தஃவாப்பணியில் ஈடுபடுத்தும் நடவடிக்கை 2005 ஆம் ஆண்டில் முதன்முறையாக இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டதாக இந்த ஜமாஅத்தின் தலைவரான ஏ.எம்.இர்ஷாத் தெரிவித்தார்.
இந்த விசேட ஜமாஅத்தின் பணிகள் முதலாவதாக மாகோ பள்ளிவாசலில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் பின்னர் பல ஊர்களில் நடைபெற்றுவருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
இலங்கையில் நூறற்றுக்கணக்கான ஊமைகள் இப்போது தஃவா பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அண்மையில் 18 பேர் கொண்ட குழுவொன்று இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்குச் சென்று வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
MashaAllah.
ReplyDeleteFabulous !They accomplish their role pretty well.
Allah uses his creations according to their sincere intentions. When we don't have that intention we look for excuses. These are lessons for any able person to do the duty for which have been created. The least what we can do is to open our doors to such people who come knocking on our doors. Refrain from telling them off - PLEASE
ReplyDeleteMasha allah....feeling happ
ReplyDeleteBeing 3 days with same jamath and surprised the way that they are performing.May Allah bless people who sacrifices to establish this group.
ReplyDelete