தேங்காய் எண்ணெயின் விலை 130 ரூபா ஆக குறைகிறது
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கான விஷேட பண்ட வரியை குறைப்பதற்கு அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளதுடன் 40,000 மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
அதன்படி ஒரு கிலோ கிராம் தேங்காய் எண்ணெய்க்கான விலையை 150 ரூபாவில் இருந்து 130 ரூபாவாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் கொப்பரா மற்றும் பாம் எண்ணெய் ஆகியனவும் ஒரு கிலோகிராம் 130 ரூபாவில் இருந்து 110 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலையை கட்டுப்படுத்துவதற்காகவே 40,000 மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment