Header Ads



குவைத்தில் 13 வருடங்களாக சிறைப்பட்ட இலங்கை பெண் 25 லட்ச ரூபாயுடன் நாடு திரும்பினார்

குவைத்தில் வீடொன்றில் 13 வருடங்களாக சிறைப்பட்டிருந்த இலங்கை பணிப்பெண் ஒருவர் 25 லட்ச ரூபாய் இழப்பீடுடன் நாடு திரும்பியுள்ளார்.

13 வருடங்களாக சம்பளம் வழங்காமல் வீட்டு உரிமையாளரினால் சிறை வைக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து வீட்டில் இருந்த தப்பிய பெண், குவைத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

ஓட்டமாவடி பகுதியில் வசிக்கும் மொஹமட் அலியார் தய்ருன்ஸா என்ற இந்த பெண்ணுக்கு போலி விமான கடவு சீட்டு தயாரித்து மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினால் குவைத் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அப்போது அவரது வயது 13 வயது என குவைத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலக அதிகாரி ஒருவர் இலங்கைக்கு அறிவித்துள்ளார்.

13 வருடங்களாக அந்த பெண் தொடர்பில் இலங்கையில் உள்ள குடும்பத்தினருக்கு தகவல் கிடைக்காத நிலையில் அவர் உயிரிழந்திருக்க கூடும் என இதுவரை அவர்கள் நம்பியுள்ளனர்.

வீட்டு உரிமையாளரிடம் இருந்து தப்பி தூதரக அலுவலகத்திற்கு வருகைத்தந்த பெண்ணிடம் உரிய தகவல்களை இலங்கை தூதுவர் நந்தீபன் பாலசுப்ரமணியம் பெற்றுள்ளார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக, அவருக்கு 25 இலட்சத்து 20 ரூபாய் இழப்பீடாக வழங்குவதற்கும், விமான டிக்கட் பெற்றுக் கொடுப்பதற்கும் வீட்டு உரிமையாளர் இணங்கியுள்ளார்.

15 நாட்களுக்குள் அவசியமான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தூதரகத்தினால் இழப்பீடும் உரிமையாளரிடம் அறிவிடப்பட்டுள்ளது.

இது குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் பெற்றுக் கொண்ட முதல் வெற்றி என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. மக்கள் சேவகன் இந்த கண்ணியதிற்குறிய தூதுவர் அவர்கற்கு அல்லாஹு அருள்புரிவானாக இவ்வாறான நல்ல தூதுவர்களை நம்நாடு தேர்ந்தெடுத்தால் வெளியில் உள்ள நம்நாட்டவர்கள் கஸ்டப்படமாட்டார்கள்

    ReplyDelete
  2. முதலில் 13 வயது பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்பிய பெற்றோரைப் பிடியுங்கள் ...

    ReplyDelete

Powered by Blogger.