முஸ்லிம் அரசியல், சாக்கடையின் உச்சக்கட்டத்தை நோக்கி செல்கிறது - YLS
பஷீர் சேகுதாவூதின் பிந்திய அறிக்கை மிகவும் கண்டிக்க தக்கது என சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார். இது விடயமாக அவர் மேலும் அவர் குறிப்பிடும் போது,
ஜனநாயக அரசியலில் காத்திரமான விமர்சனங்கள் இன்றியமையாதவை. அரசியல்வாதிகளின் அல்லது கட்சிகளின் பிழையான செயற்பாடுகள் சுட்டிக் காட்டப்பட வேண்டும். அப்பொழுதான் மக்கள் தாங்கள் தெரிவுசெய்த பிரதிநிதிகள் அல்லது தாம் சார்ந்த கட்சிகள் மக்கள் நலனுக்காக செயற்படுகின்றார்களா? அல்லது தன் நலனுக்காக செயற்படுகின்றார்களா? என்பதை சீர்தூக்கிப் பார்த்து எதிர்காலத்தில் முடிவுகளை எடுக்கக் கூடியதாக இருக்கும். ( The voters can make an informed judgment on their representatives and decide on their future course of action). ஆனால் ஒருவர் அரசியலோடு தொடர்பற்ற தனிப்பட்ட நடத்தையோடு சம்பந்தப்பட்ட தவறுகளைச் செய்வதற்கு தானே உதவி செய்துவிட்டு அல்லது களம் அமைத்துக் கொடுத்துவிட்டு ( அவரது கூற்றின்படி) அதை திருட்டுத்தனமாக வீடியோ வேறு எடுத்துவிட்டு இத்தனை ஆண்டுகள் கழித்து அவற்றை வெளியிடப்போவதாக ஊடகங்களில் அந்த கமராவின் படங்களையும் போட்டு செய்திவெளியிடுவதென்பதும் அதை சில இணையதளங்களும் முகநூல்களும் செய்தியாகப் போட்டுக் கொண்டாடுவதென்பது கண்டிக்க தக்கதும் சமூகம் வெட்கித்தலைகுனிய வேண்டியதுமாகும்.
அவர் அந்த பிழையான விடயங்ளைப் படம் எடுத்தது உண்மையானால் அவர் அந்த பிழைகளுக்கு அன்று பிழையான நோக்கத்தோடு உதவி செய்து, அவற்றைப் பிழையான நோக்கத்தோடு படம்பிடித்து, அவற்றை இவ்வளவு காலமும் பிழையான நோக்கத்தோடு பாதுகாத்து வைத்திருந்து, இன்று பிழையான நோக்கத்தோடு ( தானும் நாறி மற்றவர்களையும் நாறவைக்க) அவற்றை வெளியிடப்போவதாக அவர் கூறும்போது நம்மவர்களும் அதனை பிழையான நோக்கத்தோடு செய்தியாக வெளியிடுகின்றார்களா? என்ற கேள்வி எழுகின்றது.
இந்த அறிக்கையை எழுத முனையும்போது எனக்குள் மிகப்பெரிய மனப்போராட்டம்; இந்த அறிக்கையையும் பலர் பல கோணங்களில் பார்க்கலாம் என்பதனால். ஆனாலும் இன்று முஸ்லிம் அரசியல், சாக்கடையின் உச்சக்கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்ற நிலையில் மௌனமாக இருப்பதற்கு மனச்சாட்சி இடம் தரவில்லை. இது அடுத்த கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினை என்று விட்டுவிடலாமா என்ற ஒரு கேள்வியும் என்னுள்ளத்தில் எழுந்தது. வீடியோ கமராக்களின் படங்களையும் போட்டு வெளியிடப்பட்ட மட்டரகமான இச்செய்தி சமூகத்தின் கௌரவத்தை எவ்வளவு தூரம் பாதிக்கப் போகின்றது; என்பதை உணராமல் அரசியல் பகைமை உணர்வுகளுக்காக சமூக வலைத்தளங்களில் இதனைக் கொண்டாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது வாளாவிருக்க முடியவில்லை.
இன்று முஸ்லிம் அரசியல் பாரிய ஒரு நோயாளியாக மாறிவிட்டது. அந்த நோய்க்கிருமிகள் வளர்வதற்கான என்பதைவிட வளர்ப்பதற்கான நீர்க்குட்டையாக இன்று சமூக வலைத்தளங்கள் பாவிக்கப்படுகின்றன. அரசியலில் கட்டாயம் செய்யப்படவேண்டிய காத்திரமான விமர்சனங்களுக்கு இன்று இடமில்லை. கூலிக்கு ஆள்வைத்து சேறுபூசப்படுகின்றது.
'Reading maketh a man' வாசிப்பு மனிதனை உருவாக்கும் என்றும் 'Reading makes a full man' வாசிப்பு மனிதனை முழுமையாக்கும், என்றெல்லாம் கூறப்படுகின்றது. வாசித்தலின் மூலம் மனிதன் அறிவை வளர்ப்பதில் ஊடகங்கள் பெரும் பங்கை வகிக்கின்றன. ஆனால் இன்று சமூகவலைத்தளங்கள் என்ற ஒன்று வந்ததன்பின் மனித அறிவு மழுங்கடிக்கப் படுகின்ற சூழ்நிலையே அதிகம் காணப்படுகின்றது. ஆக்கபூர்வமான கட்டுரைகள் அபூர்வமாகக் கூட காண கிடைப்பதில்லை. அதையும் தாண்டி யாராவது எழுதினாலும் அதனை வாசிப்பதிலும் பெரிய அக்கறை இல்லை. ஆனால் யார்வேண்டுமானும் எதையும் எழுதலாம்; என்கின்ற நிலை உருவாகி இருக்கின்றது. அவற்றில் பாதி பித்னாக்கள். இவ்வாறு மனிதன் காலையில் எழுந்ததில் இருந்து தூங்கும்வரை முகநூலில் பாவச்செயலில் மூழ்கிக் கிடக்கின்றான்.
மறுபுறத்தில் தனக்கு வாக்களித்து ஆளாக்கிய முசலி மக்களின் எப்பொழுதோ தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய பிரச்சினையை, அது தீர்ந்துவிட்டால் தன் அரசியலும் முடிந்துவிடும் என்னும் அச்சத்தில் இன்னும் தீர்க்காமல் வைத்துக்கொண்டு ஊடகங்களில் விளம்பரம் தேடுகின்ற, தனக்கு வாக்களித்த மக்களுக்கே துரோகம் செய்கின்ற அரசியல் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது . இவற்றைப் பற்றி பேசுவதற்கோ எழுதுவதற்கோ யாருமில்லை. யாராவது இந்த உண்மையை சுட்டிக்காட்டினால் கூலிப்பட்டாளத்தை வைத்து முகநூல்களில் நாட்கணக்கில் சேறுபூசப்படுகின்றது. முஸ்லிம் சமுதாயத்தின் நிலையைப் பார்த்தீர்களா?
இந்த லட்சணத்தில் ஒருவர் பிழையான நடத்தையில் ஈடுபட்டாராம், அதற்கு இன்னொருவர் உதவி செய்துவிட்டு அவற்றைப் படமும் பிடித்துக்கொண்டு இத்தனை வருசமும் இருந்து, அவரது பிழைகளப் பாதுகாப்பதற்காகவே பாராளுமன்றத்தில் பேசாமடந்தையாக இருந்ததாகவும் ஒப்புக்கொண்டு இப்பொழது கட்சியைக் காப்பாற்ற அந்தப் படத்தை திரையிடப் போகிறாராம். நமது கலிமாச் சொன்ன சகோதரர்கள் இப்பொழுதே டிக்கட் எடுப்பதற்கு முகநூல்களில் வரிசையாக காத்து நிற்கின்றார்களாம். நமது சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றது. தானும் நாறி அடுத்தவர்களையும் நாறடிக்கப் போகின்றாராம். ஒரு மரியாதையுள்ள, தன்மானம் உள்ள முஸ்லிம் கூறுகின்ற வார்த்தையா இது? எவ்வளவு மட்டரகமான கூற்று. இதைப்பார்த்து வெட்கித்தலைகுனிய வேண்டிய சமுதாயம் முகநுல்களில் வஞ்சம் தீர்ப்பதற்காக விழாக்கொண்டாடுகின்றோம்.
றவூப் ஹக்கீமால் அரசியலில் பாதிக்கப்பட்ட, அல்லது அவரது அரசியல்
இதற்குமுன்னால் உள்ள பல சமூகங்களை இறைவன் அழித்திருக்கின்றான், என்பதை ஞாபகமூட்டி இறைவனைப் பயந்து கொள்வோம். இவ்விடயங்களில் உலமாக்கள் வாய்திறக்க வேண்டும்; படித்தவர்கள் வாய்திறக்க வேண்டும். இந்த சமுதாயம் தொடர்ந்தும் இவ்வாறு சீரழிய இடம் கொடுக்க முடியாது. சமுதாயத்தில் முதலாவது நேர்மையான சிந்தனைப் புரட்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும். அரசியல் சாக்கடைகள் தூக்கி வீசப்பட வேண்டும். ஒரு புதிய சமுதாயம் கட்டி எழுப்பப்பட வேண்டும்.எஸ்.அஷ்ரப்கான்)
ஹமீட் அவர்களே, இப்படி ஒரு விடயத்தை எங்களுக்கு தெரியப்படுத்தியதட்கு முதட் கண் நன்றி. சாக்கடை என்று தான் கூறி விட்டீர்கள், பிறகு என்ன உச்ச கட்டம் கிச்ச கட்டம். ஆ.. ஆ ... விளங்குது..விளங்குது.. சோழியன் குடும்பி சும்மா ஆடாது என்பார்கள். அது என்னா..... தனிப்பட்ட வாழ்வு..! அரசியல் வாழ்வு...! தலைமைத்துவம் என்றால் தனிப்பட்ட வாழ்வும் சரி, அரசியல் வாழ்வும் சரி, ஒழுக்க முள்ளதாகவும், முன்மாதிரியானதாகவும் இருக்க வேண்டும். சூடு, சொரணை உள்ளதாக இருக்க வேண்டும். தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆட வேண்டும். அது என்ன, சமூகத்துக்கு தலை குனிவு என்று வேற கூறியுள்ளீர்கள்?? அப்ப ஒரு முஸ்லீம் தலைவன் எப்படி வேண்டும் என்றாலும் நடக்கலாம் ஆனால் வெளியில் தெரியக் கூடாது. அதாவது களவெடு பிடிபடாதே. இதட்கு நீங்கள் ஒரு வக்காலத்தும், அறிவுரையும். படம் எடுத்தவனும் குற்றவாளிதான் அதில் நடித்தவனும் குற்றவாளிதான். தயவு செய்து இப்படியான சிக்கலான விடயங்களில் தலையிட்டு, நீங்கள் சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ளாதீர்கள். மானம், சூடு, சொரணை உள்ளவர்கள் தலைமைத்துவத்தில் இருந்தும், அரசியலில் இருந்தும் ஒய்வு பெறட்டும், ஒதுங்கிக் கொள்ளட்டும். இந்த கட்சியும், முஸ்லிம்களின் உரிமை போராட்டமும், பாதுகாக்கப்பட்டு முன்னெடுத்து செல்லப்பட வேண்டும். அந்த வகையில், படம் எடுத்தவர் கட்சி காப்பாற்ற பட வேண்டும் என்கிறார், எங்களுக்கு அவர் கூறுவதில் நியாயம் உள்ளதாகவே தெரிகிறது.
ReplyDeleteஹமீட் அவர்களே, இப்படி ஒரு விடயத்தை எங்களுக்கு தெரியப்படுத்தியதட்கு முதட் கண் நன்றி. சாக்கடை என்று தான் கூறி விட்டீர்கள், பிறகு என்ன உச்ச கட்டம் கிச்ச கட்டம். ஆ.. ஆ ... விளங்குது..விளங்குது.. சோழியன் குடும்பி சும்மா ஆடாது என்பார்கள். அது என்னா..... தனிப்பட்ட வாழ்வு..! அரசியல் வாழ்வு...! தலைமைத்துவம் என்றால் தனிப்பட்ட வாழ்வும் சரி, அரசியல் வாழ்வும் சரி, ஒழுக்க முள்ளதாகவும், முன்மாதிரியானதாகவும் இருக்க வேண்டும். சூடு, சொரணை உள்ளதாக இருக்க வேண்டும். தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆட வேண்டும். அது என்ன, சமூகத்துக்கு தலை குனிவு என்று வேற கூறியுள்ளீர்கள்?? அப்ப ஒரு முஸ்லீம் தலைவன் எப்படி வேண்டும் என்றாலும் நடக்கலாம் ஆனால் வெளியில் தெரியக் கூடாது. அதாவது களவெடு பிடிபடாதே. இதட்கு நீங்கள் ஒரு வக்காலத்தும், அறிவுரையும். படம் எடுத்தவனும் குற்றவாளிதான் அதில் நடித்தவனும் குற்றவாளிதான். தயவு செய்து இப்படியான சிக்கலான விடயங்களில் தலையிட்டு, நீங்கள் சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ளாதீர்கள். மானம், சூடு, சொரணை உள்ளவர்கள் தலைமைத்துவத்தில் இருந்தும், அரசியலில் இருந்தும் ஒய்வு பெறட்டும், ஒதுங்கிக் கொள்ளட்டும். இந்த கட்சியும், முஸ்லிம்களின் உரிமை போராட்டமும், பாதுகாக்கப்பட்டு முன்னெடுத்து செல்லப்பட வேண்டும். அந்த வகையில், படம் எடுத்தவர் கட்சி காப்பாற்ற பட வேண்டும் என்கிறார், எங்களுக்கு அவர் கூறுவதில் நியாயம் உள்ளதாகவே தெரிகிறது.
ReplyDelete