மஹிந்த + மைத்திரிபால ஒன்றிணைந்தால், UNP யின் நிலை அதோ கதிதான்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் ஒன்றிணைந்தால் ஐக்கிய தேசிய கட்சியின் நிலை குறித்து மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவபிரிய கருத்து வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில், குறித்து இருவரும் ஒன்றிணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலை அதோ கதிதான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் மாகாண முதலமைச்சர்கள் சிலருக்கும் இடையில் இன்று விஷேட சந்திப்பு ஒன்று கொழும்பில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பேச்சுவார்த்தை நடாத்தினோம். மகிழ்ச்சியாக இருந்தது. இந்த சந்திப்பின் போது வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரு குழுக்களிடையேயும் அரசியல் ரீதியிலான போராட்டம் ஏற்பட்டுள்ளதை கண்டுள்ளோம். அத்துடன், நாம் சிறந்ததொரு ஆரம்பத்தை எடுத்தோம்.
எவ்வாறாயினும், அவர்களது தரப்பில் இருந்து பொறுப்பு மிக்கதான பதிலொன்றை நாம் எதிர்பார்க்கின்றோம் என இசுறு தேவபிரிய மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment