நிதிமோசடி பிரிவினரால் SLFP அரசியல்வாதிகள் பாதிப்பு - ஜனாதிபதியிடம் முறைப்பாடு
நிரூபமா ராஜபக்ஸ,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முல்கிரிகல தேர்தல் தொகுதி அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தொழிலதிபர் திரு நடேசனின் மனைவியான நிரூபமா ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.
நிதி மோசடி விசாரணை பிரிவின் தொடர் துன்புறுத்தல்கள் காரணமாகவே அவர் பதவியை இராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நிரூபமா ராஜபக்ஸ இன்றைய தினமும் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
அண்மையில், நிதி மோசடி விசாரணை பிரிவின் தொடர் துன்புறுத்தல் காரணமாக பிரியங்க ஜயரத்ன பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இதேவேளை, நிதி மோசடி விசாரணை பிரிவினரால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல்வாதிகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும் , இது தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Why worry, if not done mistake ? President should not influence the bribery cases, if he really a person who respect the law.
ReplyDelete