SLFP நிறைவேற்றிய அதிரடி தீர்மானம் - அமைதியாக இருந்த ஜனாதிபதி
இலங்கையில் மீண்டும் ஒருமுறை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஏற்படுத்தப்பட வேண்டும் அதேநேரம், 2020ம் ஆண்டின் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவே களமிறங்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் கடந்த வாரம் கூடிய போது இதற்கானஅங்கீகாரத்தை கட்சி வழங்கியுள்ளது.
ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின்தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது அவர் அமைதியாகவே இருந்தார் என்றுகுறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக வாக்களிக்காது, சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லஆதரவளிப்பது என்றும் இந்த கலந்துரையாடலின்போது முடிவெடுக்கப்பட்டது.
Post a Comment