Header Ads



PETA வின் ஊடுருவல் இலங்கையில் - யானைக்கு ஆயுள் தண்டனை என ஒப்பாரி

'PETA’ எனப்படும் விலங்குகளின் நலன் தொடர்பான அமைப்பு தொடர்பில் தற்போது உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

ஜல்லிக்கட்டிக்கு தடை விதித்தமையால் தமிழகம் எங்கும் பரபரப்பான சூழல் தற்போதும் ஏற்பட்டுள்ள நிலையில் அது இலங்கையையும் விட்டுவைக்கவில்லை.

ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்த பீட்டா அமைப்பு, ஒருதடவை இலங்கையையும் விட்டுவைக்கவில்லை அதாவது இலங்கை அரசுக்கும் எச்சரிக்கை ஒன்றினை விடுத்திருந்தது.

2011 ஆம் ஆண்டில் இலங்கை பிலிப்பைன்ஸிக்கு யானைக்குட்டியொன்றை பரிசளிக்க இருந்த வேளையில் பீட்டா அமைப்பின் ஆசிய பிராந்திய நிலையம் இவ் எச்சரிக்கையை இலங்கை பிரதமர் டி.எம். ஜயரத்னவுக்கு விடுத்திருந்தது.

பிலிப்பைன்ஸ் நாட்டுடனான 50 ஆண்டு கால இராஜதந்திர உறவின் நிமித்தம், அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இலங்கை அரசு மேற்படி யானைக்குட்டியை பரிசாக வழங்குவதற்கு உத்தேசித்திருந்தது.

அதற்கு பீட்டா அமைப்பானது யானைக்கு ஆயுள் தண்டனை வழங்குகின்றமைக்கு சமமானது என்று தெரிவித்திருந்தது.

No comments

Powered by Blogger.