சல்மான் இராஜினாமா செய்யவுமில்லை, ஹசன் அலி தற்போது Mp ஆகப்போவதுமில்லை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலிக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டத்தில் தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமே இணக்கம் தெரிவித்துள்ளார். தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி வழங்கப்படுவது சில மாதங்களால் தாமதமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி திங்கட்கிழமை 9 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என செய்திகள் பரவியிருந்தமை தொடர்பில் வினவிய போதே அவர் விடிவெள்ளிக்கு இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் சில வாரங்களுக்கு முன்பு கூடிய கட்சியின் உயர்பீடம் ஹசன் அலிக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை தவறாகும். அரசியல் உயர்பீடம் அவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை.
ஹசன் அலிக்கு தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டுமென்றால் தற்போது உறுப்பினர் பதவியை வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மான் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.
அவர் இதுவரை தனது பதவியை இராஜினாமா செய்யவில்லை. இராஜினாமா செய்யும் திகதியை அறிவிக்கவுமில்லை. கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரும் போது அவர் தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்வார் என்றார்.
ARA.Fareel - விடிவெள்ளி
Jaffna Muslim my kind request please don't write about these silly guys news. what is the benefits to SL Muslims communities, If these guys became or MP or Ministers. may be good for their wives. don't put these guys faces on this website. I am sorry to say this.
ReplyDeleteThese nasty old guys let them relax at home.