யூனிஸ் நபி பள்ளிவாசல், IS பயங்கரவாதிகளிடமிருந்து மீட்பு
இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) குழுவை கிழக்கு மொசூலில் இருந்து மேலும் பின்வாங்கச் செய்திருக்கும் ஈராக்கிய படை வரலாற்று முக்கியம் வாய்ந்த யூனிஸ் நபி பள்ளிவாசலை கைப்பற்றியுள்ளது.
எனினும் 2014 ஜுனில் ஐ.எஸ் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டபோது அந்த குழுவினால் அழிக்கப்பட்ட வரலாற்று தலங்களில் யூனிஸ் நபி பள்ளிவாசலும் ஒன்றாகும்.
பைபிள் மற்றும் குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் இறைத்தூதர் யூனிஸ் அடக்கம் செய்யப்பட்ட இடமாக இந்த பள்ளிவாசல் நம்பப்படுகிறது. இது கி.மு 8 ஆம் நூற்றாண்டு தொல்பொருள் தலத்தில் கட்டப்பட்டதாக பரவலாக நம்பிக்கை உள்ளது. எனினும் மீட்கப்பட்ட இந்த பள்ளிவாசலில் வெறும் இடிபாடுகளுக்கு மத்தியில் வேலிகளை மாத்திரமே காண முடிந்ததாக ஈராக் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
கிழக்கு மொசூலில் இருந்து ஐ.எஸ் குழுவை முற்றாக வெளியேற்றும் நடவடிக்கை நெருங்கி வரும் நிலையிலேயே ஈராக்கிய படை அங்கு மேலும் முன்னேற்றம் கண்டுள்ளது.
எனினும் கடந்த ஒக்டோபர் நடுப்பகுதியில் மொசூல் மீதான படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் அங்கிருந்து சுமார் 150,000 மக்கள் வெளியேறி இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது.
வெளியேற்றியது ஷீஆ, நஸாரா கூட்டு பயங்கரவாதிகள்.
ReplyDeleteஅது சரி உங்களுக்குத் தெரியுமா ISIS என்றால் யார் என்று ??? அவர்கள் யாருமல்ல - அவர்கள்தான்
ReplyDeleteI(DIOT)S I(DIOT)S
முட்டாள்கள் முட்டாள்கள் -
ஆம் அவர்கள்தான் முட்டாள்களின் கூட்டம். ஈருலகிலும் முட்டாள்களான கூட்டம்.
அது சரி உங்களுக்குத் தெரியுமா ISIS என்றால் யார் என்று ??? அவர்கள் யாருமல்ல - அவர்கள்தான்
ReplyDeleteI(DIOT)S I(DIOT)S
முட்டாள்கள் முட்டாள்கள் -
ஆம் அவர்கள்தான் முட்டாள்களின் கூட்டம். ஈருலகிலும் முட்டாள்களான கூட்டம்.