Header Ads



துருக்கி மீதான தாக்குதலுக்கு, IS பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு


துருக்கி இஸ்தான்பூல் நகரில் இரவு விடுதி ஒன்றில் புத்தாண்டு விழாவின்போது 39 பேரை கொன்ற துப்பாக்கிதாரி ஒருவரை தேடும் வேட்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ரெயின் இரவு விடுதியில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திய அடையாளம் தெரியாத தாக்குதல்தாரியால் அங்கிருந்து தப்பிச்செல்ல முடிந்துள்ளது.

இதேவேளை இஸ்தான்பூல் இரவு விடுதி தாக்குதலுக்கு இஸ்லாமிய தேசம் குழு பொறுப்பெற்றுள்ளது. அந்த குழு நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பொன்றில்,

“கிறிஸ்தவர்கள் நம்பிக்கை திரோக விடுமுறையை கொண்டாடும் பிரபல இரவு விடுதிகளில் ஒன்றில் கலிபத்தின் வீரம் கொண்ட போராளி ஒருவர் இஸ்லாமிய தேசத்தின் பாதுகாப்பிற்கு எதிராக நடந்துகொள்ளும் துருக்கியில் ஆசிர்வதிக்கப்பட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இதனை மேற்கொண்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

துருக்கி அண்டை நடான சிரியாவில் ஐ.எஸ் குழுவுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு துருக்கியில் இடம்பெற்ற குறைந்தது இரு தீவிரவாத தாக்குதல்கள் குறித்து ஐ.எஸ் மீது சந்தேகம் உள்ளது.

இவ்வாறான குழுக்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் எமது மக்களை பலவீனப்படுத்தி நாட்டை ஸ்திரமற்றதாக்க முயற்சிக்கிறார்கள் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தடை செய்யப்பட்ட குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பீ.கே.கே) இந்த கொலைகளுக்கு பொறுப்பேற்க மறுத்துள்ளது. தாம் அப்பாவி பொதுமக்களை இலக்கு வைப்பதில்லை என்று அது குறிப்பிட்டுள்ளது. தீவிரவாதிகளை பிடிக்கும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நீடிப்பதாக குறிப்பிட்ட உள்துறை அமைச்சர் சுலைமான் சொய்லு, விரைவில் தாக்குதல்தாரி பிடிபடுவார் என்றார்.

இவ்வாறு தேடுதல் வேட்டை நீடிக்கு நிலையில் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டோரது இறுதிச் சடங்குகள் நேற்று இடம்பெற்றன.

ஏழு நிமிடங்கள் மாத்திரமே நீடித்த இந்த தாக்குதலில் கொல்லப்பட்டோர்களில் பாதிக்கும் அதிகமானோர் வெளிநாட்டினர் என்று அரசின் அனடொலு செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கொல்லப்பட்ட வெளிநாட்டு பிரஜைகளில் இஸ்ரேல், ரஷ்யா, பிரான்ஸ், துனீஷியா, லெபனான், இந்தியா, பெல்ஜியம், ஜோர்தான் மற்றும் சவூதி அரேபிய நாட்டினர் அடங்குகின்றனர்.

பொஸ்பொரஸ் ஆற்றங்கரையில் இருக்கும் இந்த இரவு விடுதி இஸ்தான்பூல் நகரில் உள்ள பிரபலமான இடங்களில் ஒன்றாகும். இங்கு வெளிநாட்டினர் மற்றும் பாடகர்கள், விளையாட்டு வீரர்கள் அதிகம் வருகை தருகின்றனர்.

எனினும் இந்த தாக்குதலில் இரவு விடுதி வாயில் இருந்த பாதுகாலர் ஒருவரே முதல் நபராக கொல்லப்பட்டவராவார். இவர் மூன்று வாரங்களுக்கு முன்னர் குர்திஷ் ஆயுததாரிகள் நடத்திய இரட்டை குண்டு தாக்குதலில் இருந்து நுலிழையில் உயிர்தப்பியவர் என்று அவரது சகோதரர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா பாதுகாப்பு சபை இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் கொடிய மற்றும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என தெரிவித்துள்ளது.

இதை விட ஒரு இழிவான குற்றத்தை நினைத்து பார்பது கடினம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்டின்தெரிவித்துள்ளார்.

இது ஒரு கொடூரமான செயல் என அமெரிக்கா கண்டித்துள்ளது. பயங்கரவாதத்தின் விளைவுகளுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்று பாப்பரசர் பிரான்ஸிஸ் வலியுறுத்தியுள்ளார். 

No comments

Powered by Blogger.