சிறிலங்காவுக்கு இன்னமும் GSP+ வழங்கப்படவில்லை – ஐரோப்பிய ஒன்றியம்
சிறிலங்காவுக்கு இன்னமும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படவில்லை என்றும், இதுதொடர்பான இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை கடுமையான நிபந்தனைகள் மற்றும் கண்காணிப்பின் கீழ் வழங்குவதற்கு ஐரோப்பிய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
எனினும், சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்து விட்டதாக, அமைச்சர்கள் பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய பணியக அதிகாரி ஒருவர் தகவல் வெளியிடுகையில், “இது ஒரு பரிந்துரை தான். ஐரோப்பிய நாடாளுமன்றமும், பேரவையும் தான் இதனை முடிவு செய்ய வேண்டும்.
வரும் மார்ச் 12ஆம் நாளுக்கும், மே 12ஆம் நாளுக்கும் இடையில் தான் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும்.” என்று கூறியுள்ளார்.
Post a Comment