முஸ்லிம் சட்டத்தில் கைவைக்க, GSP+ க்கு அடிபணிந்த அரசாங்கம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை பெற்றுக் கொள்ள 58 நிபந்தனைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க உயர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீளவும் வரிச்சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்காக ஆபத்தான 58 நிபந்தனைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிபந்தனைகளுக்கு இணங்கி இது பற்றிய முன்னேற்றத்தை ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பயங்கரவாதத்தடைச் சட்டத்தை ரத்து செய்து சர்வேதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாக புதிய சட்டமொன்றை உருவாக்கி சர்வதேச சமூகத்திடம் அது குறித்து தெளிவுபடுத்தல்
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த விசாரணைகளை துரித கதியில் விசாரணைக்கு உட்படுத்தல்
அனைத்து முன்னாள் புலி உறுப்பினர்களது புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளை பூர்த்தி செய்தல்
தடுப்புக் காவலில் வைக்கப்படுவோரின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இலங்கையின் குற்றவியல் சட்டத்தை திருத்தி அமைத்தல்
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தை மீளாய்வு செய்தல்
காணாமல் போனவர்கள் தொடர்பில் தனியான காரியாலயம் அமைத்தல்
மனித உரிமை செயற்பாட்டு பொறிமுறைமை ஒன்றை அறிமுகம் செய்தல்
பயங்கரவாத அமைப்புக்கள் நபர்கள் தொடர்பிலான பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள தமிழ் அமைப்புக்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் மீளாய்வு செய்தல்
நிதி மோசடி விசாரணைப் பிரிவு, லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவு மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் ஆகியனவற்றினால் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை துரித கதியில் பூர்த்தி செய்தல்
ஊழல் மோசடிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் ஊடாக புதிய செயற்திட்டமொன்றை அறிமுகம் செய்தல்
புதிய அரசியல் அமைப்பின் ஊடாக மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளித்தல்
புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வருதல்
காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை செய்தல்
தமிழ்மொழி பேசும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்
நாடாளுமன்றில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை குறைந்தபட்சம் 25 வீதமாக உயர்த்துதல்
முஸ்லிம் சட்டத்தின் ஊடாக விவாகம் செய்யக்கூடிய குறைந்தபட்ச வயது எல்லையை நிர்ணயம் செய்தல்
உள்ளிட்ட 58 நிபந்தனைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாகவும் இந்த நிபந்தனைகள் அமுல்படுத்தப்பட்டு அவற்றின் முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு அறிக்கை வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.
இதே வேளை நிபந்தனைகள் எதுவுமின்றி ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை வழங்குவதாகவும் இந்த அரசாங்கத்தின் மீதான சர்வதேச நன்மதிப்பினை இது பறைசாற்றுவதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment