GSP+ என்றால் என்ன..?
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் உற்பத்திப் பொருட்களுக்கு தமது வர்த்தக சந்தையில் தெரிவு மற்றும் கட்டுப்பாட்டுடன் வாய்ப்புகளை வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகளினால் GSP+ அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் கீழ் பாதுகாப்பற்ற மற்றும் சிறிய நாடுகளின் 7200 உற்பத்திப் பொருட்களுக்கு தமது வர்த்தக சந்தையில் தீர்வை வரி இன்றி பிரவேசிப்பதற்கு அவர்கள் சந்தர்ப்பம் வழங்குகின்றனர்.
சுனாமி அனர்த்தத்தின் பின்னர் 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கும் அந்த சலுகை கிடைத்தது.
மூன்று வருடங்கள் அந்த வாய்ப்பினை இலங்கை பெற்றிருந்ததுடன் 2008 ஆம் ஆண்டு இறுதியில் அதனை மீண்டும் வழங்குவதற்கு மனித உரிமை, தொழிலாளர் உரிமை, சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி ஆகிய விவகாரம் உள்ளிட்ட சர்வதேச தரத்திலான 27 விடயங்களில் இலங்கை அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றத்தை பரிசீலிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்தது.
எனினும், கடந்த அரசாங்கம் இதற்கு ஒத்தழைப்பு வழங்கவில்லை என்பதுடன் ஐரோப்பிய ஒன்றியம் இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டு 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி இலங்கைக்கான வரிச்சலுகையை இரத்து செய்தது.
தற்போது மீண்டும் கிடைத்துள்ளது. இதன் மூலம், சிறிலங்காவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 11 வீத வரிச்சலுகை கிடைக்கும்.
Post a Comment