'சிங்கள – பௌத்த பேரினவாதிகள், முஸ்லிம் பிரதேசங்களை இல்லாமற் செய்ய நடவடிக்கை'
சம்மாந்துறை மையவாடியை அண்மித்த மலைப் பிரதேசத்தை தொல்பொருள் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தும் முயற்சியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு குறித்த இடத்தை அடையாளப்படுத்தி முற்கம்பி வேலி இடப்பட்டிருக்கின்றது. இது இப்பிரதேசத்தில் சுமார் ஐம்பது வருடத்திற்கு மேலாக தொடர்ந்தேச்சியாக வாழும் இரண்டாயிரம் குடும்பங்களையும், அவ்விடத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலையும் நெருக்குவாரத்துக்கு உட்படுத்தும் செயற்றிட்டமாகும். என நாபீர் பௌண்டேசனின் தலைவரும், அரசியற் செயற்பாட்டாளரும், சமூக செயற்பாட்டாளருமான யூ.கே. நாபீர் தெரிவித்தார்.
முஸ்லிம் பிரதேசமான சம்மாந்துறை பகுதியில் தொல்பொருள் என்ற கோணத்தில் பிரதேசங்களை கையகப்படுத்தும் தொல்பொருள் திணைக்களத்தின் அநீதி குறித்து ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிட்டிருப்பதாவது;
சிங்கள – பௌத்த பேரினவாத ஆதிக்க சக்திகள் முஸ்லிம் பிரதேசங்களை இல்லாமற் செய்யும் இந்நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே சம்மாந்துறை மக்கள் இதனைப் பார்க்கின்றனர். சம்மாந்துறை பிரதேசத்தை உள்ளடக்கிய நமது அம்பாறை மாவட்ட அரசியல் களத்தில் முஸ்லிம் மக்களின் அதிஉச்ச ஆணையைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் இது விடயத்தில் அதிக பொறுப்புடையவர்களாக உள்ளனர். நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களை பாதுகாக்கக் கூடியதென்ற கோச முன்னெடுப்போடு இம்மக்களின் வாக்குகளை சுவீகரித்து அரசியல் அதிகாரத்தை சுவைத்துக் கொண்டிருக்கும் இவர்களின் பிற்போக்குத் தனத்தினால் அம்பாறை முஸ்லிம் பிரதேசமெல்லாம் சிங்கள மயப்படுவதற்கு துணையாகி வருகின்றனர்.
இத்தகைய கோணத்தில் பார்க்கின்ற போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் தற்போதைய அரசாங்கத்திற்கு சோரம் போனவர்கள் என்பது வெளிப்படையானது. இம்மாவட்ட மக்களின் வாக்குகளை இரண்டாவது இடத்தில் கபளிகரம் செய்துகொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் முக்கியஸ்த்தர்களும் குறிப்பாக இக்கட்சியின் சம்மாந்துறை பிரமுகர்களும் அதிக பொறுப்புடையவர்களாக உள்ளனர்.
இவ்வாறு பொறுப்புடன் செயற்பட வேண்டிய அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றுமறியாதவர்கள் போல் மௌனம் சாதித்து பதுங்கிக் கொண்டிருப்பது அவர்களின் கையாலாகா தன்மையைப் பறை சாற்றிக்கொண்டிருகின்றது.
மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் என்பவர்களை மக்கள் ஆதரித்தி நிற்பதென்பது வெறும் அபிவிருத்திகளை அடைந்து கொள்வதற்காக அல்ல. மாறாக மக்களும் சமூகமும் பாதிக்கப்படுகின்ற போது அதுகுறித்து கவனம் செலுத்தி தேவையான மாற்று வழிகளை தேடி மக்களை அச்சமற்று வாழச் செய்வதற்கு உதவ வேண்டும். இவ்வாறு செய்வதற்கு வக்கற்றவர்களை மீண்டும் மீண்டும் நமது மக்கள் நமது பிரதிநிதிகளாகவும், நமது அரசியல் செயற்பாட்டாளர்களாகவும் தொடர்ந்து வைத்திருக்கும் தவறை நாம் செய்து கொண்டிருப்பதனால்தான் நமது எந்த நெருக்குவாரங்களிலிருந்தும் விடுதலை பெற முடியாது அதற்குள் நொருங்கிக்கொண்டிருப்பதன் தாத்பரியமாகும்.
நமது சம்மாந்துறை மக்கள் நமக்காக இன்றிருக்கின்ற நமது பிரதிநிதிகளை உலுக்கிக் கேள்வி கேட்கின்ற சமூகமாக மாற வேண்டும். அல்லாஹ் தவிர வேறு யாருக்கும் அஞ்சாத துணிச்சல்மிக்க, துடிப்புள்ள புதிய முகங்களை நமக்கான அரசியல் செயற்பாட்டுக்குரியவர்களாக அடையாளம் கண்டு மக்களே தமக்கான பிரதிநிதிகளை அடையாளப்படுத்துகின்ற சூழலை நாம் ஏற்படுத்தாதவரை நாம் இப்படித்தான் படிப்படியாக சொந்த நிலங்களையும், சுயத்தையும் இழந்து பரதேசிகளாக மாறுவதிலிருந்து விடிவு கிட்டாது.”
அல்லாஹ் தவிர வேறு யாருக்கும் அஞ்சாத துணிச்சல்மிக்க, துடிப்புள்ள புதிய முகங்களை நமக்கான அரசியல் செயற்பாட்டுக்குரியவர்களாக அடையாளம் கண்டு மக்களே தமக்கான பிரதிநிதிகளை அடையாளப்படுத்துகின்ற சூழலை நாம் ஏற்படுத்தாதவரை நாம் இப்படித்தான் படிப்படியாக சொந்த நிலங்களையும், சுயத்தையும் இழந்து பரதேசிகளாக மாறுவதிலிருந்து விடிவு கிட்டாது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(எஸ்.அஷ்ரப்கான்)
This is a fake news.Before publish a news please analyse with the right person
ReplyDeleteஉண்மை இல்லாத செய்திகளை பரப்பி இனவாத்தை வழர்க்க
ReplyDeleteDon't spread rumours which lead to racism.
ReplyDeleteWe cannot protect our land while trying to be loyal to the politics of majority or acting to be such. This strategy has been proven to be not successful many times in the past. Muslims need to choose a different strategy at this stage. We cannot rely on verbal promises of majority politicians or influential any more. But it is necessary to take meaningful political steps to put an end to Sinhalese expansion in north-east provinces; otherwise, we will miss all the opportunities and will have to handover all the troubles to the future generation.
ReplyDeleteThe aggressive actions such as the one mentioned in the above article took place in many occasions in the east. Though Sri Lanka Muslim Congress political party occupies the chief minister post in eastern province, it seems like the chief minister didn’t take any actions against such aggressive move by radical Buddhist and government ministers or he is not in a position to take any kind of steps to resolve this aggression since the authority over land and police are not given to provincial council. Chief Ministers of north & east can take steps to bring these two authorities under their administration at last by even going to supreme court as these authorities must be given to provincial council according the Indo-Lanka peace accord, so that the minorities can face the ongoing Sinhalese expansion project legally.
The only applicable permanent solution to the current ethnic issues is to change the unitary ruling system to a federal system. The federal system does not necessarily mean that the north and east to be as a single state.
We must internationalize the Sri Lankan ethnic issues and bring permanent solution with support of international communities. There is nothing wrong doing this, it will never be against the interest of Sinhalese or steal anything from majority people but to protect our rights to live in our land peacefully. But, of course, if the interests of majority are to impose hegemony over minorities and disturb our daily life, the internationalization of ethnic issue will be against it.
We, Muslims also need to consider to rollback certain mistakes made by the late SLMC leader MHM. Ashraff. SLMC and few other minor Muslim political parties may consider restricting their political activities within north-east borders and leaving the political will of Muslims who lives outside the north-east in the hand of Muslim politicians who are in the major political parties. Muslim political parties and Muslim people of north & east may provide moral supports to Muslims in other part, can share values in common matters and involve in welfare of each others rather than separating them politically from major political parties. Since we are separate nations in north & east, both Muslim political parties and Tamil political parties together can voice our problems such as Sinhalese expansion and radical Buddhist aggression as a common voice outside the north & east and in international communities.