'ஜனாதிபதியை கவிழ்க்கும் திட்டம் கிடையாது - ரணில் ராஜினாமா செய்ய வேண்டும்'
ஜனாதிபதிய ஆட்சி கவிழ்க்கும் திட்டம் கிடையாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
புஞ்சிபொரளையில் நடைபெற்ற செய்தியாளார் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வந்து அவரை அதிகாரத்திலிருந்து நீக்கும் திட்டங்கள் கிடையாது.
2017ஆம் ஆண்டில் ஆட்சி கவிழ்ப்பது என்பது ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்காக அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். நாம் ஒருபோதும் குற்றப் பிரேரணைப பற்றி பேசியதில்லை.
மேன்மைதாங்கிய ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பற்றி யாரும் பேசவில்லை. பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராகவே பேசுகின்றோம்.
பிரதமர் தொடர்பில் நாடாளுமன்றில் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் நம்பிக்கையில்லை.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதுவே கூட்டு எதிர்க்கட்சியின் நோக்கமாக அமைந்துள்ளது.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு ஜனாதிபதி பொறுப்பு கிடையாது அதற்கான பொறுப்பினை பிரதமரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Ranil only doing good job for country.thats what they want to kick him out.
ReplyDeleteWow veryCLEVER IDEAS.THEY ARE VERY LOW CLASS OPPOSITION
ReplyDeleteRANIL got more than five lakhs votes. This man can't take atleast 500 votes. How he will going to change the government
ReplyDeleteMr GL have you forgotten. this president brought by ranils party (unp votes) not by SLFP votes.
ReplyDelete