கத்தோலிக்க திருச்சபைக்கான, பாலத்தீன தூதரகம் திறக்கப்பட்டது
கத்தோலிக்க திருச்சபைக்கான பாலத்தீன தூதரகம் அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டுள்ள நிலையில், , போப் பிரான்சிஸை பாலத்தீன அதிபர் முகமது அப்பாஸ் வத்திக்கானில் சந்தித்துள்ளார்.
போப் பிரான்சிஸ் பாலத்தீன மக்களையும், அமைதியையும் நேசிப்பதன் அடையாளமாக இந்த தூதரக திறப்பு அமைவதாக அப்பாஸ் தெரிவித்தார்.
பாலத்தீனத்தை தனி நாடாக வத்திக்கான் ஏற்றுகொண்ட நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த தூதரகம் திறக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் இருக்கும் அமரிக்க தூதரகத்தை டெல் அவிவ்-இல் இருந்து ஜெருசலேமுக்கு மாற்றுவதற்கு டொனால்ட் டிரம்ப் எண்ணியிருப்பதை சுட்டிக்காட்டி, அப்பாஸ் அது தொடர்பாக கவலையை எழுப்பியுள்ளார்.
பாலத்தீனத்திற்கும், பாலத்தீனத்திற்கும் இடையிலான அமைதி வழிமுறைகளை மீண்டும் தொடங்குவதற்கு போப் பிரான்சிஸ் எப்போதும் ஆதரவு தெரிவித்து வருகிறார்.
Post a Comment