சுவிட்சர்லாந்தில் இஸ்லாமியருக்கு குடியுரிமை வழங்குவது, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்
சுவிட்சர்லாந்து நாட்டில் மூன்றாம் தலைமுறை வெளிநாட்டினருக்கு எளிதாக குடியுரிமை அளிக்கும் பொது வாக்கெடுப்பிற்கு அந்நாட்டை சேர்ந்த சுவிஸ் மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சுவிஸில் குடியேறியுள்ள மூன்றாம் தலைமுறை வெளிநாட்டினர்கள் எளிதாக குடியுரிமை பெறுவதற்கு ஏதுவாக எதிர்வரும் பெப்ரவரி 12-ம் திகதி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டத்திற்கு அந்நாட்டு சுவிஸ் மக்கள் கட்சி (SVP) கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்த தேசிய கவுன்சிலரான Andreas Glarner என்பவர் சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை வெளியிட்டுவருகிறார்.
அதாவது, முகத்திரை அணிந்துள்ள இஸ்லாமிய பெண்ணின் புகைப்படங்களை மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இந்த சுவரொட்டிகளை வெளியிட்டு வருகிறார்.
முகத்திரை அணிந்துள்ள மூன்றாம் தலைமுறை இஸ்லாமியருக்கு எளிதாக குடியுரிமை வழங்குவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.
குறிப்பாக சுவிஸில் பிறந்த மூன்றாம் தலைமுறை இஸ்லாமியர் தீவிரவாத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த பொது வாக்கெடுப்பை ஆதரிக்க கூடாது என சுவிஸ் மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சுவிஸ் மக்கள் கட்சயின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து BDP கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், மூன்றாம் தலைமுறை இஸ்லாமியருக்கு எளிதாக குடியுரிமை வழங்குவதற்கும் அவர்கள் அணிந்துள்ள முகத்திரைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
இதுபோன்ற சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் வெளியிடுவதை சுவிஸ் மக்கள் கட்சி நிறுத்த வேண்டும் என BDP கட்சி வலியுறுத்தியுள்ளது.
Post a Comment