ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான ஊழியரின் நேர்மை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் மனிதாபிமான நடவடிக்கை தொடர்பில் அதிகம் பேசப்படுகிறது.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானத்தில் பயணித்த நபர் ஒருவர், தனது பயண பைவை விமானத்தில் விட்டுச் சென்றுள்ளார்.
பாரிய அளவு பணத்துடனான பையை விமானத்தில் விட்டுசென்ற சந்தர்ப்பத்தில், விமான சேவையின் பணிப்பாளர் சபையின் சரிபார்க்கும் ஊழியரின் மனிதாபிமான நடவடிக்கை காரணமாக, அந்தப் பை உரிமையாளரிடம் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் UL303 விமானத்தில் சிங்கப்பூரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணியே இவ்வாறு தனது பையை விட்டு சென்றுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் 2ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கப்பூரில் இருந்து கொழும்பு நோக்கி UL303 விமானத்தில் பயணித்த குவைத் நாட்டவருக்கு சொந்தமான பெறுமதியான பணம், கடன் அட்டை, ATM அட்டை, சாரதி அனுமதி பத்திரம் மற்றும் அவரது நாட்டு தேசிய அடையாள அட்டையுடனான பையை மறந்து விமானத்திலேயே விட்டு சென்றுள்ளார்.
காணாமல் போனதை கண்டுபிடிக்கும் விமான சேவையின் கொள்கையின் கீழ் இந்த பை மீண்டும் விமான பயணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விமான நிறுவனத்தினால் நேர்மை மற்றும் அர்ப்பனிப்புடன் மேற்கொண்ட விசேட சேவைக்காக குறித்த ஊழியருக்கு விசேட பாராட்டுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment