அஞ்சலோ மெத்தியூஸ், மாற்றப்படமாட்டார் - ஒத்துழைப்பு வழங்க சனத் வேண்டுகோள்
இலங்கை அணியின் தலைமை பொறுப்பிலிருந்து அஞ்சலோ மெத்தியூஸை மாற்றுவது தொடர்பில் ஒருபோதும் கலந்துரையாடவில்லையென இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் மெத்தியூஸ் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக்கிண்ண போட்டிக்கு தலைமை தாங்குவார் எனவும், தனது பொறுப்பினை புரிந்துக்கொண்டு மெத்தியூஸ் செயற்படுவார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை அணி தலைமைத்துவம் தொடர்பில் கலந்துரையாட வேண்டிய காலம் இதுவல்ல, தற்போது தென்னாபிரிக்காவுடனான தொடர் இடம்பெற்று வருகின்றது, அதற்கு அனைவரும் மெத்தியூஸிற்கு ஆதரவளிக்க வேண்டும் என அணி தேர்வுக்குழுவின்தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
டில்ஷான் தலைவராக இருந்தபொழுது அணியின் வெற்றிக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காத மெதிவ்ஸ்சுக்கு சோதனைக் காலம் தொடர்ந்தும் காத்திருக்கிறது.டில்ஷானை பிரியமாக நேசிக்கும் 04 வீரர்கள் இன்னும் அணியில் உள்ளனர். இவர்கள் மத்தியூசுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறார்கள்.அணிதலைவரை மாற்றுவதே சிறந்தது.
ReplyDelete