''சொர்க்கத்தில் சாட்டையளவு இடம் கிடைப்பது...
குவைத் நாட்டின் மிகப் பெரும் செல்வந்தரான நசீர் அல் கஹராபி அவர்களின் இறுதி வீடுதான் இது. இவருடைய வங்கி கணக்கின் மதிப்பு 12 பில்லியன் அமெரிக்கன் டாலர்.
நமக்கு அளிக்கப்பட்ட அனைத்தையும் ஒரு நொடியில் திருப்பி எடுத்துக் கொள்ளும் வல்லமையாளன் இறைவன் என்பதை ஒவ்வொரு நிமிடமும் மனத்துள் கொள்ள வேண்டும்.
இறைவன் வாக்குறுதி அளித்திருக்கிறான். "தன்னை நினைப்பவர்களை அவன் நினைப்பதாக".
அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்? அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல அவர்கள் (இதை) உணர்வதில்லை. (அல்குர்ஆன் 23:55,56)
இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா? (அல்குர்ஆன் 26:129)
‘‘நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும். நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (அல்குர்ஆன் 4:78)
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 4:1)
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல்குர்ஆன் 21:35)
நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே மரிக்கும்படிச் செய்கிறோம் அன்றியும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வர வேண்டியிருக்கிறது. (அல்குர்ஆன் 50:43)
மறுஉலகத்தில் கிடைக்கும் இன்பங்கள் கடலளவு நிறைந்தவை. இவ்வுலக இன்பங்கள் ஒருவர் கடலில் தனது ஆட்காட்டி விரலை நுழைத்து வெளியே எடுக்கும் போது அந்த விரலில் கடல் நீர் எவ்வளவு திரும்பவும் வந்து சேரும்? இந்த விரஇல் ஒட்டிக் கொண்டிருப்பதுதான் இவ்வுல இன்பம். இதுதான் இவ்வுலக மறுவுலக இன்பங்களுக்கு உதாரணம்.
கடலுடன் ஒப்பிடும் போது விரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் அளவுதான் இவ்வுலக இன்பங்கள். கடல் என்பது மறுவுலக இன்பங்கள். இதில் முஃமின்கள் எந்த இன்பத்தை தேர்வு செய்ய போகிறார்கள்?
இதைப்போன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவருக்கு சொர்க்கத்தில் சிறிதளவு இடம் கிடைப்பதைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்கள்.
''சொர்க்கத்தில் சாட்டையளவு இடம் கிடைப்பது இவ்வுலகம் இவ்வுலுகத்தில் உள்ளதை விட சிறந்ததாகும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரீ 2892, திர்மிதீ 1572, இப்னுமாஜா 4321), அஹ்மத் 15012), தாரமீ 2699)
Post a Comment