Header Ads



யார் அந்த, முஸ்லிம் அமைச்சர்

(விடிவெள்ளி பத்திரிகை)

இணைந்த எதி­ரணி எதிர்­வரும் 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு நுகே­கொ­டயில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மையில் ஏற்­பாடு செய்­துள்ள கூட்­டத்தில் தற்­போது அர­சாங்­கத்தில் பதவி வகிக்கும் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் மேடை­யே­ற­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள முஸ்லிம் அமைச்சர் ஒருவர் அர­சாங்­கத்­தி­லி­ருந்தும் விலகி மஹிந்த ராஜபக்ஷவின் அணியில் இணைந்து கொள்­வ­தற்கு பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்றுவரு­வ­தாக முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணியின் தலை­வரும் குரு­நாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முன்னாள் குரு­நாகல் மாவட்ட அமைப்­பா­ளரும் குரு­நாகல் மாந­கர சபை உறுப்­பி­ன­ரு­மான அப்துல் சத்தார் தெரி­வித்தார். 

குறித்த முஸ்லிம் அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவின் அணியில் இணைந்து கொள்­வது உறு­தி­யென்றும் தற்­போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்று வரு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார். நல்­லாட்சி அர­சாங்­கத்தில் முஸ்­லிம்கள் பல சவால்­களை எதிர்­நோக்­கி­யி­ருப்­ப­தா­கவும் முஸ்­லிம்­க­ளுக்கு இந்த அர­சாங்­கத்தில் விமோ­சனம் கிடைக்காது என்ற அடிப்படையிலே அந்த அமைச்சர் அரசிலிருந்தும் விலகவுள்ளதாகவும் அப்துல் சத்தார் தெரிவித்தார்.

4 comments:

  1. It all depends on how much he gets.

    ReplyDelete
  2. EVAN MAHINDA PINNAL PONALUM MUSLIM MAKKAL MAHINDA PINNAL POHADU.

    ReplyDelete
  3. Ap ipa matum enna nadakakuthu Muslimsku

    ReplyDelete
  4. ASLAM But diffrent situation....u never ever go with Mahinda

    ReplyDelete

Powered by Blogger.