கொழும்பு - கண்டி அதிவேகப் பாதை, ஸ்ரீ தலதா என பெயரிடப்படும்
கொழும்பு - கண்டி வீதியில் அமைந்துள்ள அதிவேகப் பாதைக்கு பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கண்டியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க கொழும்பு - கண்டி வீதியில் அமைந்துள்ள அதிவேகப் பாதை ஸ்ரீ தலதா அதிவேகப்பாதை என பெயரிடப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கமே நெடுஞ்சாலைகளில் விளக்கு அமைக்க ஒப்பந்தக்காரர்களை நியமித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மீரிகமவில் இருந்து குருநாகல் வரையில் அதிவேகப் பாதை நிர்மாணிப்பதற்கான நிர்மாணப்பணிகள் ஒப்பந்தக்காரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.
அதிவேகப் பாதை அமைப்பதற்கான கேள்விப்பத்திரங்கள் கடந்த ஆட்சியின் போது வெளிநாடுகளுக்கே வழங்கப்பட்டன.
ஆனால் தற்போதைய அரசாங்கம் உள்ளூர் ஒப்பந்தக்காரர்களிடமே குறித்த நிர்மாணப் பணிகளை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
This so-called good governance is good-for-nothing. We desperately need to topple this callous government.
ReplyDeleteName it "Kiriella highway"
ReplyDelete