Header Ads



'வொக்ஸ்வேகன்' வாகன தொழிற்சாலை, இலங்கையில் ஆரம்பிக்கப்படவில்லை (முழுவிபர, வீடியோஇணைப்பு)

மோட்டார் வாகன உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை குளியாப்பிட்டியவில் ஆரம்பிப்பது குறித்தும், அதனுடன் வொக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் தொடர்புபட்டிருப்பதாக பத்திரிகை செய்தியொன்றை மேற்கோள்காட்டியும் நேற்றைய தினம் (04) நியூஸ்பெஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் வொக்ஸ்வேகன் நிறுவனத்துடன் தொடர்பை ஏற்படுத்தி நியூஸ்பெஸ்ட் வினவியது.

இதன்போது, இலங்கையில் முதலீடு செய்யும் திட்டம் தற்போது தமக்கு இல்லை என வொக்ஸ்வேகன் நிறுவனத்தின் தொடர்பாடல் அதிகாரி கார்ட்டின் ஹோமன் உறுதிப்படுத்தினார்.


2

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று -06-bநடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கலந்து கொண்டார்.

கேள்வி: குளியாப்பிட்டியவில் அமைக்கப்படவுள்ள நிறுவனம் வொக்ஸ்வேகன் தொழிற்சாலையுடன் தொடர்புடவில்லை என பலர் கூறுகின்றனரே?

அகிலவிராஜ் காரியவசம்: குளியாப்பிட்டியவில் நாம் ஐரோப்பிய வாகனங்களை உற்பத்தி செய்யவுள்ளோம். எதிர்காலத்தில் பல்வேறு உற்பத்திகள் இடம்பெறும். அந்த நிறுவனங்களுடன் உடன்படிக்கை செய்யவுள்ளோம். பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த நிறுவனங்கள் 4 பில்லியன் ரூபா முதலீடு செய்துள்ளன.

கேள்வி: வொக்ஸ்வேகன் நிறுவனமா வந்துள்ளது என அவர் கேட்டார். நீங்கள் சரியான பதிலை வழங்கவில்லை? வொக்ஸ்வேகனா வருகின்றது?

அகிலவிராஜ் காரியவசம்: இல்லை, அது மாத்திரம் அல்ல. இந்த தொழிற்சாலை ஊடாக மேலும் பல நிறுவனங்கள், பல நிறுவனங்களின் வாகனங்களும் உற்பத்தி செய்யப்படவுள்ளன. பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். உடன்படிக்கைகளை ஏற்படுத்தி நாட்டிற்குத் தேவையான ஐரோப்பிய வாகனங்களை விநியோகிக்க உள்ளோம்.

கேள்வி: இதற்கான பணத்தினை முதலீடு செய்தது யார்?

அகிலவிராஜ் காரியவசம்: இல்லை… நான் கூறினேன் அல்லவா? இப்போது இல்லை…

கேள்வி: எந்த நிறுவனம்?

அகிலவிராஜ் காரியவசம்: உங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய என்னால் செல்ல முடியாது. சில வேளைகளில் நீங்கள் பல்வேறு விதமாக அழுத்தம் கொடுக்கின்றீர்கள். கல்வி அமைச்சு தொடர்பிலும் அவ்வாறே. நான் எனது கவலையை வெளியிடுகின்றேன். சீருடை வவுச்சர்களை வழங்கிய போது நீங்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தீர்கள். உங்களது நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் தொடர்பில் பிரச்சினை இல்லை. உங்களது செய்தி அறிக்கையிடல் தொடர்பில் கூறுகின்றேன். நான் கடினமாக நடவடிக்கை எடுத்த போது நீங்கள் அதற்கு எதிராக செய்தி வெளியிட்டீர்கள். நேர்மையாக சீருடை வவுச்சர் விநியோகிக்கப்பட்ட போது பிரச்சினை வந்தது. ஆகவே, பின்னர் தேவையான போது கேள்விகளைக் கேளுங்கள். நான் அனைத்தையும் கூறுகின்றேன்.

No comments

Powered by Blogger.