ஐரோப்பாவில் பலத்த பனிப்பொழிவு, முஸ்லிம் அகதிகள் பெரும் சிரமம், போர்க் கப்பலில் தங்கவைப்பு
ஐரோப்பாவில் பலத்த பனிப்பொழிவு மற்றும், கடும் குளிருக்கு 69 பேர் பலியாகினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐரோப்பாவில் கடந்த சில நாட்களாக பலத்த பனிப்பொழிவு காணப்படுகிறது. வரலாறு காணாத அளவுக்கு குளிர் நிலவுகிறது. போலந்து, கிரீஸ், செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளில் கடும் குளிருக்கு இதுவரை 69 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிரீஸுக்கு சொந்தமான லெஸ்போஸ் தீவில் நூற்றுக்கணக்கான அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடும் குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அகதிகள் முகாம்களில் போதிய வசதிகள் இல்லாததால், அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, கிரீஸ் கடற்படை கப்பல் லெஸ்போஸ் தீவுக்கு அனுப்பப்பட்டு, அகதிகள் போர்க்கப்பலில் தாற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர்.
பலத்த பனிப் பொழிவையடுத்து, பல்கேரியாவில் நாடு தழுவிய அளவில் மின் தடை ஏற்பட்டது. தலைநகர் சோஃபியா முற்றிலும் பனியால் சூழப்பட்டுள்ளது. அந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் பனியால் மூடப்பட்டு, நாட்டின் பிற பகுதிகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post a Comment