அவுஸ்திரேலியாவுக்கு பாகிஸ்தான் பதிலடி, இலங்கையை உதாரணம் காட்டுகிறார்கள்..!
பாகிஸ்தான் அணி தங்கள் ஆட்டத்தை மேம்படுத்தவில்லையெனில் இனி அவுஸ்ரேலியாவுக்கு விளையாட அழைக்கப்படக் கூடாது என்று இயன் சப்பல் கூறியதற்கு பாகிஸ்தான்கப்டன் மிஸ்பா உல் ஹக் பதிலடி கொடு த்துள்ளார்.
அதாவது மிஸ்பா உல் ஹக்கின் மோசமான கப்டன்சி, அணியின் மோசமான பீல்டிங் ஆகியவற்றை சாடி இயன் சப்பல் கூறும்போது, “அவுஸ்ரேலியாவில் இத்துடன் 12 போட்டிகளை பாகிஸ்தான் இழந்துள்ளது. முன்னேற்றம் இல்லையெனில் இனி அழைக்க முடியாது என்று கிரிக்கெட் அவுஸ்ரேலியா கூறப் பழக வேண்டும். மோசமான கிரிக்கெட்டை தொடர்ந்து ஆடமுடியாது.மோசமானபந்துவீச்சு,மிகவும்பழையபாணிகளத்தடுப்பு முறை ஆகிய வற்றைக் கொண்டு அவுஸ்ரேலியாவில் ஓரளவுக்கு சுமாரான கிரிக்கெட்டை கூட எப்படி வெளிப்ப டுத்த முடியும்?” என்று கடுமையாக சாடினார்.
இதனையடுத்து அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றில் எழுதிய பத்தியில் மிஸ்பா கூறியதாவது:
இயன் சப்பல் போன்ற ஒரு ஆளுமை மிக்கவர் இத்தகைய தரக்குறைவான கருத்துகளை ஒரு அணியைப் பற்றி கூறுவது அழகல்ல. அயல்நாட்டுத் தொடர்களில் அவுஸ்ரேலியாவும் தோற்று வரும் அணியே. ஜெயவர்தன, சங்கக்காரா இல்லாத அணியிடம் அவுஸ்ரேலியா கிளீன் ஸ்வீப் உதை வாங்கியது. சில இலங்கை வீரர்கள் 10 டெஸ்ட் போட்டிகளில் கூட ஆடாதவர்கள். ஆனால் அவர்களிடம் ஆஸி. கிளீன் ஸ்வீப் தோல்வி கண்டது.
தென்னாபிரிக்காவில் ஒருநாள் தொடரை 0-5 என்று அவுஸ்ரேலியா இழந்தது. நாங்களும், இந்தியாவும் அவுஸ்ரேலியாவிற்கு வெள்ளயைடித்தோம். எனவே சப்பல் கூறிய கருத்துகளை அவுஸ்ரேலியாவுக்கு நாம் கையாண்டால், தொடர்ந்து அவுஸ்ரேலிய அணி துணைக்கண்டங்களில் வெள்ளயைடிப்பு ஆகிறது.எனவே அவுஸ்ரேலிய அணியை இனி அழைக்கக் கூடாது என்று கூறலாமா? அவர்கள் இங்கு விளையாடாமலும் துணைக் கண்ட அணிகள் அவுஸ்ரேலியாவில் விளையாடாமலும் இருந்தால் கிரிக்கெட் மேம்படுவது எப்படி? என்று கூறினார்
Even though Aussie lost the test matches against Srilanka, they managed to conquer the ODI series. But Pakistan consecutively lost to Australia ??
ReplyDeletePakistan won the 2nd ODI. They played well against Australia XI, then lost the first odi which suppose to be won by Pakistanis.
ReplyDeleteThey are too scared of aussies it's not that they don't have talent. I hope they will win the odi series just to shut that idiotic moron Ian Chappel who was a good cricketer but a foul mouthed Aussie.