நுவரெலியாவில் ஆலங்கட்டியுடன், பெரும் குளிர்
நுவரெலியாவில் ஆலங்கட்டி மழையுடன் பெரும் குளிர் நிலவுவதால் காலை வேளையில் கடமைக்குச் செல்வோர் மற்றும் பாடசாலை மாணவர்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகி வருகின்றனர்.
காலை வேளைகளில் 10.00 மணிவரை இங்கு கடுங்குளிர் நிலவுகின்றது. சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் செல்லும் ‘உலக முடிவு’ ‘அம்பேவல பாம்” நுவரெலியா லேக் பகுதி, ஹக்கல தாவரவியல் பூங்கா போன்ற பகுதிகளில் கடும் குளிர் நிலவுகின்றது.
காலையில் 3-4 பாகை செல்ஸியஸ் அளவிலேயே இப் பகுதிகளில் வெப்பம் உள்ளது
Post a Comment