அரசாங்கத்தை மாற்ற முடியாது - மஹிந்தவுக்கு மைத்திரி பதிலடி
நனவாகாத கனவுகளுடன் அரசாங்கத்தை மாற்ற எவர் முயற்சித்தாலும் அந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வலுவான, தேசப்பற்றுள்ள குணநலன்கள் மற்றும் ஞானமிக்க அரசியலுடன் இணக்க அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதாகவும் எதிர்கால பயணம் 2020 ஆம் ஆண்டு தீர்மானிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
மொனராகலை கும்புக்கன் ஓயா நீர்தேக்கத்திட்டத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஊழல், மோசடி, வீண்விரயம் மற்றும் கொள்கைகளுக்கு கிரீடம் அணிவித்தவர்கள் மீண்டும் நாட்டில் ஆட்சிக்கு வர இடமளிக்க போவதில்லை.
அவர்கள் அரசாங்கத்தை அமைக்க அல்ல சதாகாலமும் வீதியில் இறங்கி நடந்து செல்ல தேவையான சூழலை இந்த நாட்டில் உருவாக்குவேன் என்பதை உங்களுக்கு தெளிவாக கூறிக்கொள்கிறேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment