வடக்கு - கிழக்கு பிரிந்தால், இனத்தை காப்பாற்ற கைங்காரியங்களை செய்வோம் - தவராசா கலையரசன்
வடக்குடன் கிழக்கு இணையாமல், கிழக்கு மாகாணம் தனிமையாக பிரியுமாக இருந்தால் எங்களது இனத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களிடம் இருக்கின்றது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
அம்பாறை பெரியநீலாவணை கிராமத்தில் உள்ள கலாச்சார மண்டபத்தில் மக்கள் சகவாழ்வு அமைப்பும், சனசமூக நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கௌரவிக்கும் நிகழ்வானது தலைவர் எஸ்.சௌமியதாஷன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் இணைந்த வடகிழக்கிலே நிலையான, நிரந்தரமான தீர்வினை பெறவேண்டும் என்று அயராது பாடுபட்டு வருகின்றோம். இதற்கு இவர்கள் இருவரினதும் செயற்படுவார்கள் நன்றாக அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம். முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் மக்களிடையே வடகிழக்கு தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள்.
இவர்கள் எமது தலைமைகளுடன் பேசி நாங்கள் முன்வைத்திருக்கும் அரசியல் தீர்வை அலசி ஆராய வேண்டும். அதனை விடுத்து வேறு விதமாக கையாண்டு வடகிழக்கு மாகாணத்தை இணைக்க உடன்படாமல் முரண்பட்டு வடக்குடன் கிழக்கு இணையாமல் கிழக்கு மாகாணம் தனிமையாக பிரியுமாக இருந்தால் எங்களது இனத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களிடம் இருக்கின்றது அதற்குரிய கைங்கரியங்களை நாங்கள் செய்வோம்.
கிழக்கு மாகாணத்தில் 11 ஆசனங்களை வைத்துக் கொண்டு இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முஸ்லிம் முதலமைச்சரை நியமிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கியிருந்தோம். அவ்வாறான ஒத்துழைப்பினை நாங்கள் வழங்கிய போதும் இந்த மாகாணத்தினை பொறுத்தவரையில் சமத்துவம் பேணப்படவில்லை என்ற உண்மையினையும் கூறியே ஆகவேண்டும் இதுதான் தமிழர்களது இன்றைய நிலை.
இந்த நாட்டிலே 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தில் நாங்கள் ஒவ்வொருவரும் சிந்தித்தது என்ன? நாளை இராணுவம் எங்கு சுற்றிவளைப்பு செய்வார்களோ? அல்லது கைது செய்யப்படப் போகின்றோமோ, எனது பிள்ளை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட போகின்றானோ என்ற ஏக்கந்தான் ஒவ்வொருவரிடமும் இருந்தது.
அவ்வாறு இழந்த இழப்புக்களில் இருந்து இன்னும் மீண்டெழ முடியாத ஒரு நிலையிலே இன்றும் வாழ்ந்து கொண்டு வருகின்றோம். எதிர்காலத்தில் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்க வருபவர்கள் முழு நேர அரசியல் பணி செய்பவர்களை அரசியல் தலைவர்களாக ஆக்க வேண்டும்.
ஐயா தமிழ் மக்களை காப்பாற்றுவது தங்களுடைய பொறுப்பு என்று கூறுகீன்றீர்கள் வரவேற்கதக்க விடயம் பாராட்டுகிறோம்.உயிரை கொடுத்தாவது தன்னை நம்பி இருக்கும் தன்னினத்தை காப்பாற்றுவது சமூகத்தில் பொறுப்புள்ள உங்களின் தலையாய கடமை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்ற அதேவேளை,இரண்டு பெரும்பான்மைக்கு மத்தியீல் சிக்குண்டு தவிக்கும் முஸ்லிம் சமூகத்தின் தலைமைகளுக்கும் உங்களைவிட இரண்டு மடங்கு தனது சமூதாயத்தை காப்பாற்றும் பொறுப்பும் இருக்கிறது,அதனால் நீங்கள் சொல்வது போன்று கண்ட இடத்தில் எல்லாம் கையொப்பமிட மூன்றாம் தர சிறுபான்மையீன் தலைகள் முன்வராது,ஐயா நாட்டில் இராணுவாத்துக்கும் பயங்கரவாத அமைப்புக்களுக்கும்தான் யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.ஆனால் அரசியவாதிகளுக்கிடையிலும்,இனங்களுக்கிடையிலும்,யுத்தம் நடந்து கொண்டு தான் இருக்கிறது,என்பதை மனதில் கொண்டுதான் அரசியல் தீர்வுக்கான யோசனைகளை சகலரும் முன்வைக்க வேண்டும்.ஐயா வடகிழக்கு இணையும் விடயத்தில் முஸ்லிம்களீன் ஆதரவை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு.இந்த நாட்டின் அரசாங்கத்தையும்,பெரும்பான்மை சிங்கள மக்களையும் முதலில் இணக்கப்பாட்டுக்கு கொண்டு வர முடியுமா உங்களால்? நடக்காத ஒரு விடயத்தை நொண்டி குதிரைக்கு சறுக்கின சாட்டு என்பது போல் முஸ்லீம்களின் தலையில் பழியை போட எத்தணிக்க வேண்டாம் ,
ReplyDeleteஎன்னயா, பாமரமக்கள உசுப்பேத்தறயள். கடந்த 30வருட பாடம் மறந்திட்டயளா? ம்... அரசியல்வாதிகளின் பொளப்பு.
ReplyDelete