சவூதி அரேபியா மீது, மீண்டும் ஷாமூன் தாக்குதல்
2012ல் சவுதி அரேபியாவை தாக்கிய ஷாமூன் வைரஸை கொண்டு மீண்டும் ஹேக்கர்கள் தற்போது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
கணினியில் உள்ள அனைத்து டேட்டா பைல்களையும் அழித்து மற்றும் ஹேக் செய்து நாட்டின் பொருளாதாரத்தையே சீர் குலைக்கும் வேலைகள் பல நாடுகளில் நடைபெற்று வருகின்றன.
கடந்த 2012ல் சவுதி அரேபியா இந்த பிரச்சனையில் சிக்கி பின்னர் மீண்டது. தற்போது மீண்டும் அரசு நிறுவனம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகம் போன்றவற்றின் வலைதளங்கள் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து வெளியான செய்தி குறிப்பில், 15 அரசு சார் நிறுவனங்கள் மற்றும் சவுதியின் தொழிலாளர் துறைகளின் வலைதளங்களும் ஷாமூன் வைரஸ் என்ற ஆபத்தான வைரஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் பொருளாதாரம் பெரிதும் சார்ந்திருப்பது எண்ணெய் நிறுவனங்களைத்தான். இது சம்மந்தமான விடயங்களை அந்த வைரஸ் மூலம் ஹேக் செய்தால் சவுதியின் மொத்த பொருளாதாரமே தலைகீழாக மாறிவிடும்.
இதை கணக்கில் கொண்டு ஹேக்கர்கள் இதை செய்வதாக நம்பப்படுகிறது.
இதனிடையில், ஷாமூன் வைரஸ் நாட்டுக்கு மிக பெரிய சேதம் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
ஆனாலும், சேதத்தின் சரியான விபரங்களை சவுதி அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment