Header Ads



சுகாதார அமைச்சு இணையம் மீது 'முஸ்லிம் சைபர் ஆர்மி' என்ற பெயரில் தாக்குதல்

சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, சுதேச வைத்தியத்துறை அமைச்சின் இணையத்தளம் நேற்று (03) தீவிரவாத அமைப்பொன்றால் ஊடுறுவப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் இணையத்தை ஊடுறுவிய தீவிரவாத அமைப்பு இணையத்தளத்தின் வரவேற்பு பக்கத்தில இஸ்லாமிய சின்னம் ஒன்றை அடையாளமாக கொண்டு 'முஸ்லிம் சைபர் ஆர்மி" என்ற பதிவை மேற்கொண்டுள்ளனர்.

தீவிரவாத அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட பதிவில் 'நோபல் வாழ்க்கை அல்லது வீர மரணம்" என்ற பதிவும் இடப்பட்டுள்ளது.

இதேவேளை ஊடுறுவலை மேற்கொண்டவர் பெயர் மிஸ்டர் ஷெட் (Mr.Z) எனவும் பதிவிடப்பட்டுள்ளது

இந்நிலையில் ஊடுறுவலை மேற்கொண்ட தீவிரவாத அமைப்பு இந்தோனேசியாவை சேர்ந்தது என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

3 comments:

  1. உங்கள் இணைய தலத்தில் இது போன்ற ஊர் பெயர் அற்ற செய்திகள் வராமல் தடுத்தால் நன்றாக இருக்கும் இச்செய்தியில் எந்த நாட்டில் இச்சம்பம் நடை பெற்றதென குறிப்பிடப்படவில்லை

    ReplyDelete
  2. You r correct mr.nafees

    ReplyDelete
  3. Yeah. It's Sri Lanka Health Ministry website. The logo of the hackers says "Muslim Cyber Army" and the link to the facebook says it's from Indonasia. There are no confirmed details as this is a terrorist attack from Indonasia. But, investigations underway. Hacking probably from Sri Lanka by a group of racists. Dr Ziyad

    ReplyDelete

Powered by Blogger.