Header Ads



உங்க மொபைல், இப்படி எல்லாம்தான் கீழே விழும்

க்ராக் ஆன ஸ்க்ரீன் இருக்கிற ஸ்மார்ட்போன் வச்சிருக்கிறவங்க என்ணிக்கை ஸ்மார்ட்போன் இல்லாதவங்க எண்ணிக்கையை விட அதிகமா தான் இருக்கும். ஆயிரக்கணக்குல காசு போட்டு வாங்குற நம்ம போனை உடைக்க நமக்கு மனசு வராதுதான். ஆனால், நம்ம இயல்பு அப்படி ஆக்கிடுது. நம்ம போன் ஸ்க்ரீன் உடையாம பாத்துக்கறது எப்படி? எந்த எந்த சூழ்நிலைகள்ல நம்ம மொபைல் கீழே விழும்?

1) டைனிங் டேபிள்

வீடா இருந்தாலும், ஹோட்டலா இருந்தாலும் மொபைலை டேபிள் மேல வைக்காதீங்க. நம்ம மொபைல் மேல நமக்கு அக்கறை இருக்கும். ஆனால், பக்கத்துல இருக்கிற ஆளு தண்ணி எடுக்கிறேன், தால்ச்சா எடுக்கிறேன்னு தட்டி விடுவாங்க. மொபைல் கீழ விழும் இல்லைன்னா இட்லியா மாறி அது மேல சாம்பார் விழும். அதனால, நாம எவ்ளோ சாப்பிடுறோன்ற கலோரி அளவை விட மொபைல் எங்க இருக்குன்ற கவனம் சாப்பாடுறப்ப இருக்கட்டும்.

2) சட்டை பாக்கெட்:

நம்புங்க. சட்டை மேல் பாக்கெட்டுல எப்ப நாம பேனா, பணம், கார்டு, மொபைல் எல்லாம் வைக்க ஆரம்பிக்கிறோமோ அப்ப தான் நாம அங்கிள் ஆயிட்டோம்னு அர்த்தம். காலேஜ் பசங்க எத்தனை பேர் அப்படி வைக்கிறாங்கன்னு பாருங்க. வசதியான விஷயம்தான். ஆனால், அந்த பாக்கெட்டுல மொபைல் வைக்கிறப்ப அது கீழ விழறதுக்கான வாய்ப்பு அதிகம். குனிந்து எதையாச்சும் எடுக்கறப்ப, இல்லைன்னா கால் லேசா தடுக்கி விழுறப்பன்னு  கங்காருகுட்டி மாதிரி மொபைல் தொபுக்கடீர்னு வெளிய வந்து விழுந்திடும்.

3) ரிலாக்ஸ்...

கோவம் வந்தா ரகுவரன் மாதிரி தண்ணி குடிங்க. தயவு செய்து மொபைல் எடுத்து நோண்டாதீங்க. இந்தியாவுல வாழுற 80% பேர் எப்பவும் ஸ்ட்ரெஸ்ல தான் இருப்பாங்க. அதுல 50% பேர் கோபமா இருக்கறப்ப கைல மொபைல் வச்சிருப்பாங்க. அதுல 20% பேர் மொபைலை தூக்கி போட்டு தங்களோட கோவத்தை காட்டுவாங்கன்னு.... எந்த சர்வேலயும் சொல்லல. ஆனால், இது நிஜமாதான் இருக்கும். இல்லையா? சோ, டென்ஷனா இருக்கப்ப மொபைல் பத்திரமான இடத்துல இருக்கட்டும்.

4) பேண்ட் பின் பாக்கெட்...

சேம்சங் காரனும், சைனா மொபைல் கம்பெனிகளும் புதுசா மொபைல் விடுறப்ப கூடவே அவ்ளோ பெரிய பாக்கெட் இருக்கிற ஜீன்ஸ் ஒண்ணை சேர்த்து ரிலீஸ் பண்ணனும். அந்த அளவுக்கு பாக்கெட் சைஸை விட பெருசா மொபைல் வருது. அதனால, பேண்ட் பின் பாக்கெட்டுல மொபைல் வைக்கிறவங்களும் கவனம இருக்கணும். அப்படியே உட்காருவது, பைக்ல போறப்ப கீழ விழுறதுன்னு மொபைல் ஆக்சிடெண்டுக்கு வாய்ப்புகள் அதிகம்.

5) வீட்டுல குழந்தைங்க இருந்தா...

வீட்டுல குழந்தைங்க இருந்தா யோசிக்காம protection case வாங்கிடுங்க. அதுலயும் விளிம்புல பெருசா, எப்படி விழுந்தாலும் உடையாம பாதுகாக்குற கேஸ் நிறைய இருக்கு. நம்ம கைல இருக்கிறது 20,000 ரூபாய் மொபைலா, 2000 ரூபாய் மொபைலான்னு சமூகத்துக்கு தெரியாம போகலாம். ஆனால், உடைஞ்சா நாம சமூகத்துக்கு தெரியாமதான் அழ வேண்டியிருக்கும். அல்லது, வீட்டுக்குள்ள வந்ததும் அந்த புரொட்டக்‌ஷன் கேஸ் எடுத்து மாட்டிடுங்க. ஏன்னா, குழந்தைகளும் காதலும் ஒண்ணு. எப்ப, எங்க, எப்படி வரும்னு தெரியாது.

6) சார்ஜிங்

நம்ம கைல இருக்கிற நேரத்தை விட சார்ஜிங் பாயிண்ட்லதான் மொபைல் அதிக நேரம் இருக்கும். கேபிள் நீளம் கம்மி, சார்ஜிங் பாயிண்ட் மொக்கைன்னு அதுலயும் பல பிரச்னைகள் இருக்கும். அதனால, சர்க்கஸ் காட்டுற மாதிரிதான் நம்ம மொபைலை வைப்போம். அந்த நேரம் பார்த்து “லோன் வேணுமா சார்”ன்னு கேட்கிற கால் வரும். வைப்ரேட் ஆகி மொபைல் கீழ விழும். அப்புறம் அந்த காலை எடுத்து, லோன் வாங்கிதான் இன்னொரு போன் வாங்கணும்.அதனால் சார்ஜ் போடுறப்ப கவனமா இருங்க.

7) கார்

 கார்ல போறப்ப கால் கண்டிப்பா வரும். எடுத்து அப்புறமா பேசுறேன்னுதான் சொல்ல நினைப்போம். ஆனால், அப்பன்னு பாத்து குறுக்க ஒரு சைக்கிள் வரும். போனை எங்க வைக்குறோம்னு தெரியாம, எதாவது ஒரு கேப்ல போட்டுடுவோம். அப்புறம் அது டேமேஜ் ஆகுறதும், ஆகாததும் நம்ம ராசிபலன் சம்பந்தப்பட்ட விஷயம். அதே மாதிரி 99 ரூபாய்க்கு மொபைல் ரெஸ்ட் தர்றான்னு ஆன்லைன் சேல்ல ஒண்ண வாங்கி, கார் கண்ணாடில ஒட்டியிருப்பீங்க. நம்ம ஊரு ஸ்பீடு ப்ரேக்கர் தர்ற அதிர்வுல அது மொபைல கீழ போடலாம். காருக்குள்ள இருக்கப்ப, மொபைல் பத்திரமான இடத்துல வச்சிட்டு வண்டியை ஸ்டார்ட் பண்ணுங்க.

இன்னும் இன்னும் பல வித்தியாசமான சூழ்நிலைகள்ல மொபைல் உடையலாம். அதையெல்லாம் கணிக்கிறது கஷ்டம். குறைந்தபட்சம் இந்த ஏழு சிச்சுவேஷன்லயாவது நம்ம மொபைலை பத்திரமா பாத்துப்போம். மறக்காம tempered glass போட்டுடுங்க. அப்புறம் ஆண்ட்ராய்டு ஐதீகம் படி இந்தப் பதிவை நிறைய ஷேர் செஞ்சா, மொபைல் கீழ விழுற வாய்ப்புகள் குறையலாம்.

No comments

Powered by Blogger.