மாடுகளை அடக்குவதற்கு குரல் எழுப்பிய சமூகம், முஸ்லிம் ஆசிரியை விவகாரத்தில் மௌனம்
ஜல்லிக்கட்டு விடயத்தில் கூட குரல் எழுப்பிய எம் முஸ்லிம் சமூகம் முஸ்லிம் சகோதரி விடயத்தில் மௌனமாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்
நேற்று புதன்கிழமை 25.01.2017 ஒரு சம்பவத்தை அனைவரும் இணையதளத்தின் ஊடாக பார்த்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் முஸ்லிம் ஆசிரியை பெண் என்று கூட பாராமல் சோனிக்கு வகுப்பில்லை என அவமான படுத்திய இனவாதத்தை தூண்டும் அதிபரான ஜெயந்தி தன பாலசிங்கத்துக்கு எதிராக உடனடியாக சட்டநடவடிக்கை ஆசிரியர் சங்கம் எடுக்க முன் வரவேண்டும்
இனவாதம் நாட்டில் இல்லை என மார்பு தட்டி வீர வசனம் பேசும் நல்லாட்சியில் உள்ள அரசியல் வாதிகளுக்கு இந்த சம்பவம் சமர்ப்பணம்
நல்ல பிரஜைகளை சமூகத்துக்கு உருவாக்கும் நிறுவனமே பாடசாலையாகும் இப்படியான இனவாத கருத்துக்களை கொண்ட அதிபர்கள் அந்த பாடசாலையில் இருந்தால் நல்ல பிரஜைகள் எவ்வாறு உருவாகும் என்பது கேள்வி குறியாகும்
இந்த அதிபர் இந்த சம்பவத்துக்கு முன்பு கூட பாடசாலையில் குற்றங்களை செய்துள்ளார் என பாதிக்கப்பட்ட ஆசிரியை பாதிமா பரிஹா பாயிஸ் கூறியுள்ளார் அதாவது பாடசாலை பிள்ளைகளுக்கு வந்த உணவு பொருளான 425 கிலோ அரிசியை தனது வீட்டுக்கு எடுத்த செல்ல முற்பட்ட வேளையில் பாத்திமா பரிஹா எனும் இந்த ஆசிரியை உலக உணவு சபைக்கு அறிவித்தமையினால் அவர்கள் வந்து 425 கிலோ அரிசி உட்பட வேறு பொருட்களையும் கண்டெடுத்துள்ளார்கள்
சுகுணா ,முத்துக்குமார் ,சிவராசா என்பவர்களிடம் கேட்டால் தெரியும் என ஆதாரத்துடன் சுட்டி காட்டியுள்ளார்
ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒரு நிகழ்வை கருத்தில் வைத்து எமது சம்பளத்தை வெட்டுகின்றார் கணக்கு கூட காட்டுவதில்லை வேதனையுடன் கூறியுள்ளார்
புதன்கிழமை அதிபருக்கு எதிராக பாதிக்கப்பட்ட முஸ்லிம் ஆசிரியை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்
உண்மையில் இந்த ஆசிரியையின் தைரியத்தை எம் சமூகமும் ,ஏனைய சமூகமும் பாராட்ட வேண்டும் இன்று இந்த ஆசிரியைக்கு நடந்த சம்பவம் எதிர்வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் ஏனைய ஆசிரியர்கள் ,ஆசிரியைகளுக்கும் நிகழலாம் என்பதை புரிந்து கொண்டு பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு பக்க பலமாக ஏனைய ஆசிரியர்களும் இருப்பது காலத்தின் தேவையாகவுள்ளது காரணம் இது போன்ற அதிபர்கள் உள்ள பாடசாலைக்கோ அல்லது இந்த இனவாதம் பிடித்த அதிபர் இருக்கும் பாடசாலைக்கோ நீங்களும் இடமாற்றம் செய்யப்படலாம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்
அநீதி இழைப்பவருக்கு இஸ்லாம் இவ்வாறு கூறுகின்றது
அநீதி இழைக்கப்பட்டவரின் பிரார்த்தனையை அஞ்சிக் கொள்வீராக, ஏனெனில் அவரின் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியில் எத்தகைய திரையும் கிடையாது. (அவரின் துஆ ஒப்புக் கொள்ளப்படும்) (நூல்: புகாரி, முஸ்லிம்)
முஸ்லிம் சகோதரி என பாராமல் ஒரு பெண் ஆசிரியை என்பதை கருத்தில் கொண்டு இலங்கை ஆசிரியர் சங்கம் இந்த அதிபருக்கு எதிராக சட்டரீதியாக தண்டனை வழங்க போராட வேண்டும் அது போன்று எமது அரசியல்வாதிகளும் இவ்விடயத்தில் அதிகம் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட சகோதரிக்காக உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து எதிர்காலத்தில் இது போன்ற இனவாத செயல்கள் எங்கும் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்
சபா ரௌஸ் - கல்முனை
Is this website genuinely interested in good ,positive,
ReplyDeletethoughtful, democratic ,neutral and thought-provoking
quality comments ? Or , is this just another time-pass
website ?
இந்த மாதிரி சொரி நாய்கள் நிறைய இருக்கிறது.
ReplyDeleteA True Human will respect the rights of another Human regardless of his race, colour or any other differneces.
ReplyDeleteWhen racism get into the heart of an idividual.... he is no more in human nature but only in human shape.
Respect the righst of other people... God will protect our rights.
Well said
Delete