ரணில் சுவிஸ் போனபின் ஆட்சியை கவிழ்க்கமாட்டேன் - மஹிந்த தடாலடி
ரணில் வெளிநாடு சென்றிருக்கும் போது நான் ஆட்சியை கவிழ்க்க போவதில்லை, அவர் நாட்டில் இருக்கும் போதே ஆட்சியை கவிழ்ப்பேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“ரணில் விக்ரமசிங்க நாட்டில் இல்லாத போது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு நான் ஒன்றும் முதுகில் குத்துபவன் அல்ல. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ரணில் விக்ரமசிங்க வெளிநாடு செல்லும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.
அவர் நாட்டில் இருக்கும் போதே ஆட்சியை கவிழ்ப்பது தான் எனது திட்டம். தற்போதைய ஆட்சியாளர்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் குழுக்கள் அனைத்தும் அரசாங்கத்துக்கு எதிராக திரும்புகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை.
ஐ.தே.க அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு உதவியதே நான் செய்த தவறு என்று இப்போது எல்லோரும் உணரத் தொடங்கியுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டை வரவேற்கும் முகமாக அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் “நான் சுவிட்ஸர்லாந்து செல்ல இருக்கின்றேன் மஹிந்தவுக்கு முடிந்தால் அந்த நேரத்தில் நாட்டை கவிழ்த்துக்காட்டட்டும்” என்று பிரதமர் கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இதை தெரிவித்திருந்தார்.
ENNADA NEEKA SINNAPILLAYAL MATHIRI MESSAGE VIDERINKO............ NEEKALELAM LEADER?????????
ReplyDelete