கோதபாயவின் தேசப்பற்று, மிகவிரைவில் அம்பலமாகும் - ராஜித
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவின் தேசப்பற்று சில காலங்களில் நாட்டு மக்களுக்கு அம்பலமாகும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
காலி உடுகமவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்…
மிக் தாக்குதல் விமான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தியாகும் போது கோத்தபாயவின் தேசப்பற்றை தெரிந்து கொள்ள முடியும்.
ஊழல் மோசடிகள் தொடர்பில் கடந்த அரசாங்கம் விசாரணை நடத்தியது போன்று தற்போதைய அரசாங்கம் விசாரணை நடத்துவதில்லை.
அனைத்து விடயங்களும் சட்ட ரீதியில் சட்ட நியதிகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படுகின்றன.
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர். மிக் தாக்குதல் விமான கொடுக்கல் வாங்கல் குறித்த விசாரணைகளின் பின்னர் கோத்தபாய எவ்வாறான தேசப்பற்றாளர் என்பது மக்களுக்கு புரியும்.
அப்போது அரசியல் நிலைமைகள் குறித்து மக்கள் தெளிவடைவார்கள் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ராஜித எவ்வளவு பெரிய பொய்யன் என்று எல்லோருக்கும் தெரியும்.
ReplyDeleteஇப்படியே சொல்லி சொல்லி இரண்டு வருடத்தை முடித்து மூன்றாவது வருடத்தில் கால் பதித்துள்ளீர்கள் கூட்டிக்கழித்தால் இன்னும் இரண்டு வருடம் திரு நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது.sir மக்கள் நல்ல புத்திக் கூர்மையோடுதான் இருக்கிறார்கள்.
ReplyDelete