Header Ads



முஸ்லிம்களுக்கு பெரும் அநீதி - றிசாத் பதியுதீன்

புலிகளினால் அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நடவடிக்கைகள் மேலும் அநியாயத்தை ஏற்படுத்தியுள்ளன என அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண முஸ்லிம்கள் அகதிகளாக தென்னிலங்கையில் வாழ்ந்த காலத்திலே அவர்கள் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை, வன வள அதிகாரிகள் 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி ஜி பி எஸ் முறையின் கீழ் கொழும்பில் இருந்து கொண்டு வர்த்தமானிப் பிரகடனம் செய்தனர். இதன் மூலம் முஸ்லிம்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது. இந்தப் பிரகடனம் மேற்கொண்ட விடயம் 2015 ஆம் ஆண்டு தான் வெளியே தெரிய வந்தது.

முசலிப் பிரதேச சபைக்குட்பட்ட, மருதமடு கிராம சேவகர் பிரிவிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான 2800 ஹெக்டேயர் காணிகளை வன பரிபாலனத் திணைக்களம் விளாத்திக்திக்குளம் என்ற பெயரில் பிரகடனப்படுத்தியது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அந்தப் பிரதேசமக்களின் பிரதிநிதி என்ற வகையில் கடந்த அரசாங்கத்தில் நாம் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவினாலேயே அவர்களுக்கு அரை ஏக்கர் வீதம் காணிகள் வழங்கப்பட்டது. 2800 ஹெக்டேயர் காணிகளை இழந்த அந்த மக்களுக்கு ஆக 208 ஹெக்டேயரே வழங்கப்படிருக்கின்றது. புலிகளினால் அநீதி இழைக்கப்பட்ட இந்த மக்களுக்கு கடந்த அரசின் இந்த நடவடிக்கைகள் மேலும் அநியாயத்தை ஏற்படுத்தியுள்ளன. நொந்து போன இந்த மக்கள் மீளக் குடியேறும்போது இனவாதிகள் இவ்வாறு மீண்டும் கொடுமைப்படுத்துகின்றனர்.

2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகின்றோம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

2 comments:

  1. Politics! Politics! politics ! Super , super , super
    dirty politics to RULE TOGETHER AND CONTEST SEPARATELY!
    Don't shout , react super fast , resign your job and
    sit with the opposition ! All of you Muslim MPs ! Just
    act fast LOCAL ELECTION IS ROUND THE CORNER. MY3 HAS
    PROVIDED 'FOOD FOR EASTERN MUSLIM MPs' TO GRIND FOR
    LOCAL GOVT ELECTION.

    ReplyDelete
  2. ஆற்றைக்கடந்தாள் அண்ணன் என்ன தம்பி என்ன ......
    ஏறிவந்த ஏணியை உதைத்து விடுவதுதானே வளமை ..... ஏற்றுவதற்கு முன் யோசித்திருக்க வேண்டும். ஊமை ஊரைக் கொள்ளும் என்பார்கள். என்ன செய்வது. அல்லாஹ் பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுமாறு கூறுகிறான் அதைத்தான் எம்மால் உறுதியாக செய்யமுடியும்.

    ReplyDelete

Powered by Blogger.