சுவிஸில் மாபெரும் ஒன்றுகூடல் - ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம்கள் பங்கேற்கலாம்..!
ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையமும், மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குடும்ப ஒன்றுகூடல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 13,14,15,16,17 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
மலை பாங்கான, ரம்மியமான இயற்கை சூழலில் அமைந்துள்ள அல்பினா ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த குடும்ப ஒன்றுகூடலில் ஐரோப்பாவின் எத்தேசத்திலிருந்தும் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் குடும்பமாக கலந்துகொள்ள முடியும்.
இந்த குடும்ப ஒன்றுகூடலின் போது மௌலவி ஒருவர் கூடவே இருந்து, இதில் பங்கேற்பவர்களை வழிநடத்துவார்.
ஆண், பெண் என இருபாலாருக்கும் தனித்தனியாகவே நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அத்துடன் சிறப்பு பயான் நிகழ்ச்சி, சிறுவர்களுக்கான நிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டி என பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
முக்கிய குறிப்பு - இன்ஷா அல்லாஹ் இந்த குடும்ப ஒன்றுகூடலில் பங்கேற்கவுள்ளவர்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம், 15 ஆம் திகதிக்கு முன்னதாக முற்பணமாக 100 சுவிஸ் பிராங்குகளை ஏற்பாட்டாளர்களிடம் கையளித்து, தமது வருகையை உறுதிப்படுத்துக்கொள்ளும்படி வேண்டப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு
Haneef 0041 78 889 03 36
Ameer 0041 78 633 13 35
Firdous 0041 79555 53 54
Post a Comment